
பொதுவாக உலக நாடுகளுக்கு இடையேயான அமைப்புகளின் வழக்கமான கூட்டங்களும், உச்சிமாநாடுகளும் நடக்கிறபோது அவை ஏதோ சம்பிரதாயத்துக்குக் கூடுவதாகவே இருந்து வந்துள்ளன. அல்லது, பெரிய நாடுகளின் அரசுகள் தங்களது சந்தைத் தேவைகளுக்கு உடன்படும்படி சிறிய நாடுகளை நிர்ப்பந்திப் பதற்கான சந்திப்புகளாகவும் அக்கூட்டங்கள் நடந்துள்ளன. புதனன்று (மார்ச் 27) தென்னாப் பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பாகிய ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு அவற்றிலிருந்து மாறுபட்டதாக ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்த இந்த நாடுகளின் அரசுத் தலைவர் கள் எடுத்துள்ள ஒரு முக்கியமான முடிவு ‘பிரிக்ஸ் வங்கி’ ஏற்படுத்துவதாகும்.
உறுப்பு நாடுகளின் சமமான பங்களிப்பில் 5,000 கோடி டாலர் முதலீட்டில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாட்டு வங்கி, செயல்படத் தொடங்குவதற்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகக்கூடும். வங்கியின் தலைமையகம் அமையவுள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை நடைமுறைகள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறு முழுமையாகச் செயல்படுகிறபோது, மேற்குலகம் சம்பந்தப்படாத அமைப்பின் வங்கி பல்வேறு வளரும் நாடுகள், சிறிய நாடுகள், பின்தங்கிய நாடுகள் ஆகியவற்றின் சாலை வசதிகள், பாலங்கள், குடிநீர் போன்ற பல்வேறு உள்கட்டுமான வளர்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டும்.
மிக முக்கியமாக, கடனுதவி அளிப்பதன் பெயரால், ஒரு நாடு எப்படிப்பட்ட திட்டங் களைச் செயல்படுத்த வேண்டும், எத்தகைய வர்த்தக நடைமுறைகளைக் கையாள வேண் டும், கடனைத் திருப்பிச் செலுத்த எத்தகைய சமூகச் செலவினங்களையெல்லாம் வெட்டிச் சுருக்க வேண்டும் என்றெல்லாம் கெடுபிடி செய் கிற உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற வற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு ஓரளவு வாய்ப்புக் கிடைக்கும் என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டைக் கவனித்து வந்திருப்பவர்கள் தங் களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
அதே நேரத்தில், இந்த வங்கியானது ‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு உள்ளேயே எந்த ஒரு நாடும் - குறிப்பாக சீனா - மற்ற நாடுகளைப் பொருளா தார ரீதியாக ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏற் பாடாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையும், அப்படிப்பட்ட ஐயப்பாடுகள் தேவையில்லை என்ற நம்பிக்கையும் உச்சி மாநாட்டில் வெளிப் பட்டுள்ளன. இத்தகைய வெளிப்படையான அணுகுமுறைகள் ஆரோக்கியமானதேயாகும். உலகளாவிய பொருளாதார உறவுகள் ஒரு அடிப்படையான தேவையாகியிருப்பதை மறுப் பதற்கில்லை. ஆனால், அதன் பெயரால் அமெ ரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளின் தேவை களுக்கு ஏற்பவே உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் செயல்படுகின்றன என்பதை மறுப் பதற்கில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான் வளரும் நாடு கள் தங்களுக்கான நிதியுதவிக் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் கடந்த காலங்களில் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வந்திருக்கிறது. அந்த முயற்சிகளின் பலனாகக் கனிந்து வந்துள்ள பிரிக்ஸ் வங்கி புதிய தடம் பதிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது. அதை நிறைவேற்றுகிற கடமை பிரிக்ஸ் நாடுகளின் அரசுகளுக்கு இருக்கிறது. soodram.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக