வியாழன், 5 ஜனவரி, 2012

புயல் நிவாரணம் நித்தியானந்தா பப்ளிசிட்டி ஸ்டன்ட்

புதுச்சேரி, கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், 96 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன,'' என நித்தியானந்தா தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: "தானே' புயலால் புதுச்சேரி, கடலூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏம்பலத்தில் உள்ள நித்தியானந்தா பீடத்தில் இருந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறோம். கடந்த 3ம் தேதியிலிருந்து, ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, போர்வைகள் வழங்கப்படுகின்றன. தினந்தோறும் 40 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சித் துறை சாலைகளை சீர் செய்வதற்கு, நாளை (இன்று) 20 ஜே.சி.பி., 20 டிராக்டர்கள் புதுச்சேரிக்கு வந்து பணிகளை மேற்கொள்ளும். நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 25 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, ஏம்பலத்தில் அமைந்துள்ள என் பீடத்தில் இலவச மருத்துவமனை கட்ட ஒதுக்கிய நிதியாகும். இருப்பினும், புயல் பாதிப்பிற்காக அந்த தொகை பயன்படுத்தப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இங்கு இலவச மருத்துவமனை கட்டப்படும். பீடத்தின் சார்பில் 10 நாடுகளில் இருந்து 600 பேர் இங்கு வந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இன்னும் 200 பேர் வருகின்றனர். புயலில் சேதமடைந்த படகுகள், வீடுகள், மீன் வலைகளை கணக்கிட்டு, தேவையான உதவிகளை மேற்கொள்ள உள்ளோம். தியான நிகழ்ச்சிகள் மூலம் வரும் நிதியை கொண்டு சேவை செய்கிறோம். எங்கள் சேவையை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மன தைரியம் கொடுத்தால் போதும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நித்தியானந்தா கூறினார்.

கருத்துகள் இல்லை: