செவ்வாய், 3 ஜனவரி, 2012

புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை கலைஞர் நேரில் பார்வையிடுகிறார்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் கலைஞர் வரும் 4ஆம் தேதி நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கலைஞர் தனது திருவாரூர் தொகுதி மற்றும் தானே புயலாலும் கடும் மழையினாலும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடும் சேதத்திற்குள்ளான பகுதிகளை பார்வையிட வரும் 4ஆம் தேதி முதல் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்துக் கூறி அரசின் மூலம் ஆவண செய்தி வழிவகுக்கவும், எந்தவித உதவியும் அற்று அல்லல் படும் ஏழை, எளிய மக்களுக்கு திமுக அமைப்புகள் துணைபுரிவதற்கான வழிவகைகளை காணவும் இந்த பயணத்தை கலைஞர் மேற்கொள்கிறார் என்றும், வரும் 4ஆம் தேதியன்று காலை முதல் கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலைஞர் பார்வையிடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக, எப்போதும் தொடர்ந்து பாடுபடும் என்று கலைஞர் அடிக்கடி சொல்லுவார். தற்போது தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது, புயலால் இன்னல் பட்டுத்தவிக்கும் மக்களுக்காக, தான் சென்று பார்வையிட்டு, அதற்கான நிவாரணத்தை திமுக கட்சி சார்பில் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்வது பெருமிதமாக இருக்கிறது. வாழ்க அவரது தொண்டு!

கருத்துகள் இல்லை: