திங்கள், 2 ஜனவரி, 2012

Vayalar Ravi:முல்லைப்பெரியாறு பிரச்சனை: மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது


முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று, மத்திய மந்திரி வயலார் ரவி கூறினார்
தமிழ்நாடு கேரள மாநிலங்கள் இடையே நீடித்து வரும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, கேரளாவில் உள்ள தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி வயலார் ரவி, நேற்று கண்ணூர் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். இதற்கு பதில் அளித்து வயலார் ரவி கூறியதாவது:
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் பிரதமர் மட்டும் ஒரு முடிவுக்கு வர முடியாது.
இரு மாநில அரசுகளும் இதுபற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம். இதற்கு இரு மாநிலங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வயலார் ரவி கூறினார்.

கருத்துகள் இல்லை: