ஞாயிறு, 1 ஜனவரி, 2012

2011 திருப்பதி ஏழுமலையானுக்கு 1,600 கோடி வருமானம்

  திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டில் 1,600 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.  நாட்டிலேயே மிகவும் பிரபலமான கோயிலாகவும், வருமானம் அதிகம் உள்ள கோயிலாகவும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அவர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், நகை போன்றவற்றை செலுத்துகின்றனர். தவிர, சேவா டிக்கெட் மூலம் சிறப்பு தரிசனமும் செய்கின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையானின் வருமானம் அதிகாரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டில் ஏழுமலையானை 2.2 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 1.3 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பணம், நகை என உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 1,100 கோடி வசூலாகி உள்ளது. ஆர்ஜித சேவா டிக்கெட், பிரசாத விற்பனை மூலம் 300 கோடியும், தங்கும் விடுதிகள் மூலம் 200 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் பக்தர்கள் மூலமாக ஏழுமலையானுக்கு மொத்தம் 1,600 கோடி கிடைத்துள்ளது. இந்த வருவாயில் 80 சதவீதம் சாதாரண பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தியது. மீதமுள்ள 20 சதவீதம், விஐபி.,க்கள் மூலம் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: