திங்கள், 25 அக்டோபர், 2010

Karnataka MLA's கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: எம்.எல்.ஏ., வீடுகளில் ரெய்டு

பெங்களூரு : கர்நாடகாவில் கட்சித் தாவும் அல்லது அரசுக்கு ஆதரவளிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம், 1984ல் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது. தற்போது, 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சமீபத்தில், ம.ஜ.த., வெளியிட்ட, "சிடி'யின் படி, ம.ஜ.த., எம்.எல்.ஏ., சீனிவாசுக்கு கட்சி மாறுவதற்கென, பா.ஜ., எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, 25 கோடி ரூபாய் வரை விலை பேசியதாக தெரிந்தது.
கடந்த 26 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவை உலுக்கிய, "கட்சித் தாவலுக்கு கூலி' ஊழலில், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பைரே கவுடா என்ற சுயேச்சை எம்.எல்.ஏ., அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வீரப்ப மொய்லியிடம், காங்கிரசில் சேருவதற்கு இரண்டு லட்ச ரூபாய் வரை பேசியதாகவும், அந்த வகையில் காங்கிரசுடன் சேர்ந்து, ராமகிருஷ்ண ஹெக்டே அரசை கவிழ்க்கவும் திட்டமிட்டதாக கூறியுள்ளார்.

கட்சித் தாவல் தடை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன், 1984 நவம்பரில், தனக்கும், மொய்லிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த ஆடியோ கேசட்டை, பைரே கவுடா வெளியிட்டார்."மொய்லி டேப் ஊழல்' என்றே புகழ் பெற்ற இச்சம்பவத்தில், பிற்காலத்தில் தரம்சிங் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற பைரே கவுடா, மொய்லியை கப்பன் பார்க்கில் சந்தித்து, அவரது காரில் ஏறி சென்றார். சதாசிவ நகருக்கு சென்றடைந்த பின், அப்போதைய காங்கிரஸ் பொருளாளர் வீட்டுக்கு மொய்லி சென்றார். அங்கிருந்து முனிரெட்டிபாளையா செல்லும் வழியில், காரிலேயே முதல் முறை எம்.எல்.ஏ.,வான பைரே கவுடாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் அடங்கிய சூட்கேசை மொய்லி கொடுத்தார்.

பின்னர், பைரே கவுடா வெளியிட்ட ஆடியோ டேப்களில் காரில் சென்று கொண்டிருந்த போது, தனக்கும், மொய்லிக்கும் நடந்த பேச்சுவார்த்தை விவரம் உள்ளது என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.இச்சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், என்.டி.வெங்கடேஷ் கமிஷன் தலைமையிலான விசாரணையில், இந்த டேப்பில் பேசியிருப்பது மொய்லி தான் என்பதை சரியான வகையில் உறுதி செய்ய முடியாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வருமான வரிதுறையினர் அதிரடி ரெய்டு : பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் இன்று காலையில் வருமானவரி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சுரேஷ், நாகேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரது வீட்டிலும் வருமானவரி துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பெல்லா
குஞ்சப்பன் - சென்னை,இந்தியா
2010-10-25 12:28:26 IST
இன்றைய காலத்தில் பொது நலம் என்பது எங்கும் இல்ல. அனைவருக்கும் சுயநலம் தான். இருபத்து ஐந்து கோடி கொடுத்தால் ஆட்சியை பிடித்து இரு நூற்று ஐம்பது கோடி சம்பாதிக்க ஆசை. பொது மக்களுக்கு எவனும் ஒன்னும் செய்ய போவது இல்லை. கெட்டு சீரழிந்து வரும் இந்த அரசியலால் நம் நாடும் கேட்டு சீரழி போவது உறுதி....
kANNAN - India,இந்தியா
2010-10-25 12:19:43 IST
கர்நாடக அரசியலில் இப்போது நடக்கும் அவலங்கள் அனைத்திற்கும் நாற்காலி போய்விடும் என்ற பயத்தில் அரிப்பு எடுத்துள்ள பீ ஜெ பீ யும், பீ ஜெ பீ சப்போர்ட்இல் ஏற்கனவே ஆட்சில் இருந்து நாற்காலி அரிப்பில் சொரிந்து கொண்டிருக்கும் ம.ஜ.த.கும்பலுமே காரணம். இதற்கு பீ ஜெ பீ கைத்தடியான ரெட்டி ப்ரோக்கர்ஸ். எனவே அங்கு எம்.எல்.ஏ. விலை ஏறியுள்ளது.... எடியுரப்பாதான் இந்தியாவின் நம்பர் ஒன் நில பேர ஊழல் மன்னன். மக்கள் நிலத்தில் அடித்த பணத்தை இப்போது எம்.எல்.ஏ. வாங்குவதற்கு பயன் படுத்துகிறார்கள்...இந்த நட்டத்தை அடுத்த ஊழலில் ஈடு கட்டி விடுவார்கள்...ஒரு சிறிய மாநிலத்தில் இந்த அளவு ஊழல் செய்கிறார்கள் என்றால் , இவர்கள் கையில் இந்தியா கிடைத்தால்....?...
ராமராசு - தமிழ்நாடு,இந்தியா
2010-10-25 11:50:59 IST
லஞ்சத்தை ஒழிப்பதற்காக அரசும் மற்றும் பொது நல அமைப்புகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இது போன்று கோடிக்கணக்கான அரசியல் பேரங்களால் சிறு சிறு லஞ்சங்கள் தவறாகவே இல்லாமல் போய்விட்டன. இப்படி கிடைக்கும் பணத்தை தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்வார்கள். இது போன்ற மிகப்பெரிய லஞ்சத்தினால் கொஞ்சம் சலசலப்பு இருக்குமே தவிர, நாளடைவில் மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டுவிடும். நமது நாட்டில் லஞ்சம் ஒழிய வேண்டுமானால், இது போன்ற அரசியல் பேரங்களும், உயர் அதிகார வர்கத்தில் இருக்கும் லஞ்சமும் முதலில் களையப்பட வேண்டும். ஏனென்றால் "அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி" என்பதும் "தலையிருக்க வால் ஆடாது" என்பதும் நம் முன்னோர்கள் அனுபவத்தில் சொன்னது....
snatarasan - chennai,இந்தியா
2010-10-25 11:40:22 IST
ஆட்சி\அதிகாரத்தில் எவ்வளவு வருமானம் இருந்தால்,விலை இவ்வளவு உயர்ந்திருக்கும்! கேட்டால் மக்களுக்கு தொண்டு செய்ய என்கிறார்கள்! கேவலமாக இருக்கிறது! ஊழல், லஞ்சம், என்பதை ஒழித்தாலே, போதும் நாடு முன்னேறிவிடும்! !!...
விவேக் - ஈரோடு,இந்தியா
2010-10-25 10:47:57 IST
நம்ம தமிழ்நாடு ரொம்ப நல்லா இருக்கு.. நாம கர்நாடகாவ பத்தி பேச... இங்கேயே கேவமலா தான்.. அங்க பரவால 25 கோடி ஆனா இங்க 100 கோடிக்கு மேல கேப்பானுங்க...
ஹசன் பசரி - கூத்தாநல்லூர்,இந்தியா
2010-10-25 10:23:46 IST
பொதுக்கூட்டம்,சோடா பாட்டில், தேர்தல்,பணம் பட்டுவாடா ,எம் எல் எ , எம் பி, பாராளுமன்றம் ,கட்சி தாவல், ஆட்சி கவிழ்ப்பு ,பேரம், விலைக்கு வாங்குதல் ,ஆள் கடத்தல், எல்லாமே ஜனநாயகத்தின் அறிகுறிகள் அல்லது பணனாயகத்தின் விளைவுகள்...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-25 10:14:28 IST
ஒரு MLA வுக்கே 25 கோடி என்றால். மதில் எப்படி பேரன்கள் நடந்திருக்கும் 6 MLA சீட்க்கு ஒரு MP அப்ப MP க்கு மினிமம் 150 கோடியா? இப்பவே கண்ணகட்டுதே !!!...
வி.கே.லோகநாதன் - REDHILLS,இந்தியா
2010-10-25 10:11:38 IST
நீதி துறையில் உள்ளவர்கள் முன்வந்து கட்சி தாவுதல் சட்டப்படி குற்றம் சுட்டி காட்டி எம்.எல்.ஏ ---- க்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் பரிந்துரை செய்ய வேண்டும்....
ஹம்துன் அஷ்ரப் - பரங்கிப்பேட்டை,இந்தியா
2010-10-25 09:05:17 IST
இந்த விசயத்தில் யாரையும் குற்றம் சொல்லி பிரோயோஜனமில்லை. காரணம் நம்நாட்டில் நாட்டுக்காக உழைத்த உண்மையான இறைபக்தி கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் .இப்போதுள்ள அரசியல்வாதிகள் சுயநலத்தையே மூலதனமாகக்கொண்டவர்கள் தான் ''தான்''எல்லாம் என ஆகங்காரம் கொண்டவர்கள். நாற்காலி கனவுகளூடன் வலம் வரும் இவர்களூக்கு ''இருபத்தி ஐந்து கோடி''கள் என்ன தங்க சுரங்கத்தையே கொடுத்தாலும் அதுவும் போதாது எனும் மனம்படைத்தவர்கள். இறைவா இந்த நாட்டை சுயநலவாதிகளிடமிருந்து நீதான் காப்பாற்ற வேண்டும்....
மீனா - சிகாகோ,இந்தியா
2010-10-25 08:55:18 IST
இதை விட கேவலமான செய்தி கர்நாடகாவிற்கு இல்லை. கர்நாடக mla எல்லாரும் கர்நாடகாவின் மானத்தை வாங்கி விட்டார்கள். கர்நாடகாவில் மாக்கள் தான் உள்ளார்கள். மனிதர்களுக்கு பஞ்சம். அவர்கள் இதயம் என்பதை விற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன! சீ இதுவும் ஒரு மாநிலமா!...
அம்பானி - n,இந்தியா
2010-10-25 08:32:15 IST
வாழ்க ஜனநாயகம் ( பணநாயகம் ) ..............
VAIDYA - SYDNEY,இந்தியா
2010-10-25 06:46:39 IST
எடியுரப்பா நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்களக்கு என்ன விலை நிர்ணயிக்கிறார்கள்? இவ்வளுவு பணமும் கருப்பு பணமா....
VAIDYARAMAN - sydney,இந்தியா
2010-10-25 06:42:10 IST
LET THE ceo AND iT WAIT TO ALLOW THE TRANSACTION OF PURCHASE AND SALE OF MLAS OF KARNATAKA IS OVER AND IMMEDIATELY BOOK AL THOSE CONCERNED INCLUDING THE GIVER AND TAKER TO PUT THEM IN BARS THROUHG COURT SO THAT THEY WILL REMAIN IN JAIL TO LOOSE THEIR SEATS TOO.WHETHER THE GOVT OF INIDIA AND KARNAKTA HAS THE GUTS TO DO THIS?...
C Suresh - Charlote,யூ.எஸ்.ஏ
2010-10-25 05:15:43 IST
ஜனநாயகம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? ஜனநாயகம் என்பது அளவுக்கு மீறி சாப்பிடும் சக்கரை மாதிரி ஆகிவிட்டது. நமக்கு கொஞ்சம் மாற்றம் தேவை....
P.N.Sankararaman - srirangamtiruchchiraappalli,இந்தியா
2010-10-25 04:25:05 IST
கர்நாடக அரசியலில் இப்போது நடக்கும் அவலங்கள் அனைத்திற்கும் நாற்காலி அரிப்பு எடுத்துள்ள காங்கிரசும் காங்கிரஸ் கலாச்சாரத்தில் ஏற்கனவே ஊறி நாற்காலி அரிப்பில் சொரிந்து கொண்டிருக்கும் ம.ஜ.த.கும்பலுமே காரணம்.இதற்கு காங்கிரஸ் கைத்தடியான ஆளுநர் ஒரு கையால் வேறு.எனவே அங்கு எம்.எல்.ஏ. விலை ஏறியுள்ளது....

கருத்துகள் இல்லை: