திங்கள், 25 அக்டோபர், 2010

அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க.,வை தோற்கடித்து விட்டனர் : ராமதாஸ்

""அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு, ஏழு லோக்சபா தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.,வை தோல்வியடைய வைத்து விட்டனர்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், "வருந்தினார்!'

பா.ம.க., சார்பில் மேட்டூர் சட்டசபை தொகுதி இளைஞர், இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம், மேச்சேரியில் நேற்று நடந்தது.

முகாமுக்கு தலைமை வகித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:இன்றைய இளைஞர்கள் சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர். தந்தை, சகோதரர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். "டிவி'யில் ஒளிபரப்பும் மாமியாரை பழி வாங்குவது, மருமகளை கொலை செய்வது போன்ற வன்முறை காட்சியைப் பார்த்து கெட்டு போகின்றனர்.தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, என்னுடன் மூன்று வன்னியர்கள் மட்டுமே படித்தனர். என் மகன் படிக்கும் போது, அவருடன் எட்டு பேர் படித்தனர். தற்போது இடஒதுக்கீடு மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம், 250 பேர் மருத்துவப் படிப்பு, 15 ஆயிரம் பேர் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.இடஒதுக்கீடுக்காக நடத்திய போராட்டங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியாது.

போராட்டம், இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்குவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஏழு தொகுதிகளிலும் மாம்பழத்தை மிதித்து, நசுக்கி, பா.ம.க.,வை தோல்வியடைய வைத்து விட்டனர். தமிழகத்தில் பா.ம.க., ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.இரண்டரை கோடி வன்னியர்கள் கொண்ட தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு வறுமை நீங்கி, புதிய வரலாறு படைக்கும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

அறிக்கை - சென்னை,இந்தியா
2010-10-25 15:08:10 IST
இந்த வார காமெடி டைம் திங்கள் கிழமையே ஆரம்பிடுச்சு !!!.. .. கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு.. கொஞ்ச நாளைக்கு முன்பு 2011 இல் பாமக தலைமையில் ஆட்சி என்று அறிக்கை விட்டார். பின்னர் அய்யா ஒரே ஒரு ராஜசபா சீட்டுக்கு நடையா நடந்தார் .. ஒன்னும் ஆகலை.... இதே அறிக்கையை 2011 தேர்தலுக்கு பின்னர் திருப்பவும் வெளியிடுவார் ... அய்யாவுக்கு ஒரு கோழி முட்டை பார்சல் !!!...
சயீத் பாபு சேலம் - டோஹாகத்தார்,இந்தியா
2010-10-25 15:04:39 IST
இரண்டரை கோடி வன்னியர்னா தொகுதிக்கு ஒரு லட்சம் ஒட்டு உங்களுக்கு விழனுமே? அன்புமணிக்கு தேர்தல்ன்னா என்னான்னு தெரியுமா? உங்க ஐடியா இப்ப புரியுது. தமிழ்நாட்டுல மேல்சபை வர்ரதால உங்களுக்கு பிரச்சினை இருக்காது. எலெக்சனில் நிக்காமலே உங்க மகன் முதல்வர் ஆகுறதுக்கு இதைவிட வேற என்ன வேணும். மக்கள் ஒட்டு போடணும்னு அவசியம் இல்லை. அப்படியே காடுவெட்டிய துணை முதல்வர் ஆக்கிடுங்க (மேல்சபை துணையுடன்தான்) எப்படியும் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு போடமாட்டாங்க. கலைஞர் ஐயாவை பிடிச்சா மேல்சபை சீட்டு நிச்சயம். வாய்ப்பை தவறவிடாதீங்க. நாம கூட்டத்துல மட்டும் தமிழ் வாழ்கன்னு பேசுவோம். நம்ம பிள்ளைங்கள இங்கிலீஷ் மீடியாதுல படிக்க வைப்போம். வாழ்க தமிழ்நாடு....
ஒருவன் - பெங்களூர்,இந்தியா
2010-10-25 14:48:52 IST
ஹா ஹா ஹா.... கலக்கிட்டீங்க "ராம், சிங்கப்பூர்"........
baisa - dubai,இந்தியா
2010-10-25 14:04:59 IST
இந்த கொசு தொல்லை தாங்கமுடியல்லை...
solomon - kovilpatti,இந்தியா
2010-10-25 13:59:11 IST
திமுகவுடன் கூட்டணி வைத்து அரசியலில் பிழைக்கும் வழியை பாருங்கள் மருத்துவர் அவர்களே...
பா. இராமமூர்த்தி - புதுதில்லி,இந்தியா
2010-10-25 13:52:30 IST
அன்புமணி தமிழக முதல்வர் ஆவது கனவல்ல, கானல் நீர். இவர், மைய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, தான் அந்த பதவிக்குத் தகுதியற்றவர் என்பதை பல முறை நிரூபித்தார். அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (AIIMS) அன்றைய தலைவராக (Dean) இருந்த டாக்டர் வேணு கோபால் அவர்களை இவர் பதவி நீக்கம் செய்து பிறப்பித்த ஆணையை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அதனால் அன்றைய பிரதமரும் மைய அரசும் கூட சங்கடத்திற்கு உட்பட்டனர். சில வருடங்களுக்கு முன்பு, லாலு பிரசாத் யாதவ் தனக்கும் பிரதமராகும் ஆசை உண்டு, ஆனால் தான் அவசரப்படவில்லை எனக் கூறினார் (என்ன ஒரு பெருந்தன்மை!). அதே வரிசையில், அன்புமணியும் தமிழக முதல்வராக ஆசைப்படலாம். ஆனால் அதெல்லாம் சாத்தியப்படுமா? உறுதியாக இல்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பொறுப்பு என்பது சவால்கள் நிறைந்த பணி. இவரால் எப்படி அத்தகைய ஒரு பொறுப்பை சரி வர நிறைவேற்ற முடியும்? சசி தரூர் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்பி, அவருக்கு இந்திய அரசு பரிந்துரை செய்த போது, அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியப் பிரதமரிடம் சொன்னார் "அந்தப் பதவிக்குத் தேவையான பக்குவம் சசி தரூருக்கு இல்லை". அது எவ்வளவு உண்மை என்பதை காலம் உணர்த்தியது. அதைப் போல, இவர் தமிழக முதல்வர் பொறுப்பிற்குத் தேவையான பக்குவம் இல்லாதவர் என்பதை காலம் உணர்த்தும். முன்னாள் இரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மிகத் திறமையாக செயலாற்றியும் கூட, அவரை விட்டு விட்டு, அன்புமணியைத் தான் இராமதாஸ் அமைச்சராக்க முடிவு செய்தார். இராமதாஸ் முன்னேற்ற விரும்புவது, தன் குடும்பத்தைத் தான், வன்னிய மக்களை அல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வேளை, இராமதாஸ் தன் குடும்பம் மட்டும் தான் வன்னிய இனம் என நினைக்கிறாரோ?...
Avudaiselvan - Virudhunagar,இந்தியா
2010-10-25 13:50:19 IST
அன்புள்ள டாக்டர், தமிழ்நாட்டை தீய பாதைக்கு அழைத்து சென்ற / செல்லும் பெருமை தங்களையே சேரும் . இன்னும் / மேலும் தொடர்ந்து முயற்சி செய்ய வாழ்த்துக்கள்,...
ராம் - மும்பை,இந்தியா
2010-10-25 13:43:50 IST
கே.விஜயராகவன் - சென்னை,இந்தியா - அவர்கள் எழுதிய கருத்து முற்றிலும் சரி. உனக்கு மாம்பழ ஜூஸ் - ரொம்ப புடிக்குமில்லே. மக்கள் 2011 - இலேயும் ஒனக்கு மாம்பழ ஜூஸ் புழிஞ்சு குடுக்க போறாங்கோ....
rs - coimbatore,இந்தியா
2010-10-25 13:24:08 IST
முதலில் உன் மகனை தேர்தலில் நின்று mla or mp அல்லது கவுன்சிலராக ஆக்கவாவது vetri pera வையுங்கள்...
Malar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-25 13:18:21 IST
வந்துட்டார்யா ............ கிரேட் ஜோக்கர்...
ஒரு எளிய இந்தியன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-25 13:07:29 IST
சாதி பற்றி பேசுவது இப்போது பெருமைப்படும் ஒன்றாகிவிட்டது. சாதியை பெயருக்கு பின்னால் போடுவதை தவிர்ப்போம் என்று முந்தைய தலைமுறை தலைவர்கள் முடிவெடுத்து அதை நடைமுறைபடுத்தவும் செய்தார்கள். தெருவுக்கு சாதிப்பெயர் இருந்ததை கூட எடுத்தார்கள். ஆனால் இன்றோ சாதியை வைத்தே கட்சி தொடங்குகிறார்கள். மிகச் சாதரணமானவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் இருந்தாலும், தலைவர்களின் வெறியேற்றும் பேச்சுக்களால், அவர்களும் மற்ற சாதியினரை வெறுப்போடு பார்க்கும் சுழலை உருவாக்குகிறார்கள். சாதியை மறைமுகமாக சொல்லிக்கொண்டு இருந்த காலம் போய், தான் இன்ன சாதி என்று பெருமைபடுத்தும் எண்ணம்தான் அதிகரித்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணம் சாதி பற்று மட்டுமே என்று சொல்ல முடியாது. அதிகார ஆசையும், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியும், தங்கள் வாரிசுகள் உழைக்காமல் காலம் காலமாக சுகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற மிகப் பெரிய சுய நலமும்தான். சிலர் நல்லவர்கள் இருக்கலாம் - அவர்களை அடக்கி வைத்து விடுகிறார்கள் சுய நலவாதிகள். சுயநலம் கருதாத தலைவர்கள் வரவேண்டும். நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை....
vanniyan - USA,யுனைடெட் கிங்டம்
2010-10-25 12:51:34 IST
அடுத்த சட்டமன்ற தேர்தல் ல உன்ன துண்ட காணும், துணிய காணும் நு வெரட்டி அடிக்க போறாங்க. அப்ப தெரியும் உனக்கு அன்புமணிய CM மா வரவாரா இல்ல வரமாட்டாரா நு .......
ஹஹா - வேளூரே,இந்தியா
2010-10-25 12:43:09 IST
ராமு எங்கள வெச்சு ஒன்னும் காமெடி கீமடி பண்ணலையே??...
venki - chengalpattu,இந்தியா
2010-10-25 12:34:11 IST
மருத்துவர் அன்பு மணி தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே வன்னியர்களின் வாழ்வில் வெளிச்சம் வரும். எனவே வன்னியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்வராக்குவோம் வன்னியர்கள் முன்னேற பாடுபடுவோம்...
கே.ஆர்.பீ புதுகை - புதுக்கோட்டை,இந்தியா
2010-10-25 12:31:22 IST
அரசியல் ஜோக்கர், உன்னை தோற்கடித்தது உன்னுடைய சுய நல அரசியலும் ஜாதி வெறியும் தான். இனி உன்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது....
முத்து - Bangalore,இந்தியா
2010-10-25 12:25:44 IST
டாக்டர் அய்யா லொள்ளு சபா ப்ரோக்ராம் ரூம்ப நல்லா இருக்கு ..............வி எச்பெச்ட் மோர் ப்ரோக்ராம் ஷோ லைக் திஸ் .....................
லோடுக்கு பாண்டி - பெங்களூர்,இந்தியா
2010-10-25 12:09:21 IST
அனைவரும் னா வன்னியர்களும் சேர்த்து தானே ? பாருங்கப இவரு இல்லைனா வன்னியர் யாரும் படிச்சு இருக்க முடியாது ன்னு சொல்லுறாரு...
இராக .உதயா - கோலாலம்பூர்,மலேஷியா
2010-10-25 12:08:05 IST
இவர மாதிரி ஆளுங்களுக்கு நல்ல பாடம் புகட்டுங்கடா என் அருமை மக்களே !!!!...
மறத்தமிழன் - சென்னை,இந்தியா
2010-10-25 12:07:55 IST
முடியல... தாங்க முடியல......
Nithayanadha - Chennai,இந்தியா
2010-10-25 12:07:10 IST
அய்யா ராமதாசு, உன்னுடைய மொள்ளமாறிதனதுக்கு ஒரு எல்லையே இல்லையா? எந்த கட்சியும் உன்னை சேர்த்து கொள்ளவில்லை....
mohideen - riyadh,சவுதி அரேபியா
2010-10-25 12:05:14 IST
அய்யா கும்புடுரோமுங்க. நீங்களும் உங்க மகனும் வந்தா தமிழகம் உருப்படவே உருப்படாது..................
dinesh - ஹைதராபாத்,இந்தியா
2010-10-25 12:04:29 IST
முதல்ல நீங்க சேலம் ல தனிய நின்னு ஜெயிங்க . அப்புறம் பேசலாம் . உங்க மகனுக்கு பதிலா ராஜ்ய சபா போனவரும் வன்னியர் தானே ....
sarathi - salam,இந்தியா
2010-10-25 12:04:01 IST
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-அன்புமணி சவால் எனக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறி பிடித்திருக்கிறது-அன்புமணி ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-25 11:57:38 IST
மாம்பழத்தை நசுக்கி ஜூஸை குடிச்சிட்டு, கொட்டையை மட்டுமாவது விட்டாங்கலேன்னு சந்தோசப்படுங்க வைத்தியரே..கொட்டையும் போச்சுன்னா, நீங்க எப்படி அன்புமணி தலைமைல கோட்டையை பிடிப்பீங்க.....
சேஷாத்ரி - chennai,இந்தியா
2010-10-25 11:55:57 IST
உங்ககிட்ட பிடுச்சதே இந்த காமெடி தான் .....
கருத்து கந்தசாமி - chennai,இந்தியா
2010-10-25 11:50:42 IST
ஐயோ தமாசு தாசு நீங்க வராம லாஸ்ட் ஒன் வீக் தினமலர் வாசிக்க ஒரே போரா இருந்துச்சு but now ????????...
பிரவீன் - சென்னை,இந்தியா
2010-10-25 11:49:37 IST
முறுக்,முறுக்,முறுக்,முறுக்,முருகே,முருகே. டீ,காபி ,டீ,காபி,டீ,காபி,டீ,காபி,டீ,காபி,டீ,காபி,...
2010-10-25 11:44:02 IST
அனைவரும் சேர்ந்து மாம்பழத்தை மட்டும மிதிக்கலை மாங்கொட்டையும் சேர்த்து மிதுசகசுட்டாங்க...
ஜோசப் ராஜா - கும்பகோணம்,இந்தியா
2010-10-25 11:43:54 IST
தீபாவளி சரவெடியாய் மருத்துவர் அவர்களின் காமெடி ஆரம்பிச்சிருக்கு... "தமிழகத்தில், அன்புமணி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்." என்ன வில்லத்தனம்... வடிவேல் சொல்ற டயலாக் தான் ஞாபகம் வருது... "" அவர் நார்மலா பேசுறார இல்ல நக்கலா பேசுறாரா என்றே தெரியல..."" என்ன சொன்ன "சினிமாக்காரர்களுக்கு ஓட்டு போட்டு தறி கெட்டு போகின்றனர்" கலைஞர் சினிமா காரர் தான்... ஜெயலலிதா..எம்ஜியார் எல்லாருமே சினிமா காரர்கள் தான்.. அவர்களுடன் கூட்டணி சேர்கிராயே ஏன்?.. ஏதோ பேசவேண்டும் என்பதற்காக பேசகூடாது .. எது பேசினாலும் தெளிவா பேசு...நீ இல்லனா யாருமே ஆட்சி அமைக்க முடியாதோ... அப்போ நீ யார் கூடயும் கூட்டணி இல்லாம தனிய நில்லு... உங்கள் கட்சி ஒரு தொகுதியிலாவது ஜெயிக்கிறதா என்று பார்ப்போம்.....
Sankaran - Chennai,இந்தியா
2010-10-25 11:43:26 IST
இவரு இப்படியே போனா....... ? இவரு மகன் ஏற்கனவே "எனக்கு வெறி பிடிச்சிருக்கு" னு வாக்குமூலம் கொடுத்திருக்காரு. அப்பன், மகன் இரண்டு பெரும் ஒண்ணா ஆஸ்பத்திரிக்கு போனா எதாவது சலுகை உண்டா?...
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-25 11:36:31 IST
ஹெலோ சிரிப்பு தாஸ் இனிமே உன் பப்பு வேகாது .........................
அசோக் - துபாய்,இந்தியா
2010-10-25 11:33:36 IST
கொசுவ அடிக்கிறதுக்கு எதுக்குங்க 10 பேரு ஒண்ணா சேந்து கம்பால தாக்கனும்.. நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல......
VANNIYAN - SMPATTI,இந்தியா
2010-10-25 11:32:36 IST
இவர் பையனை முதல் அமைச்சர் ஆக்க பாக்கிறார்.அதற்கு எல்லா வன்னியனும் இவன் பின்னால வரணுமாம். முதலில் இந்த கிரீமி லேயர் reservation -ஐ முதலில் ஒழிக்க வேண்டும். பாண்டிச்சேரி-ல ட்ரை பண்ணி ஒன்னும் ஆகல, அப்பறம் வட தமிழ்நாடு தனியா வேணும் என்றார்....
ஆதவன் - சென்னை,இந்தியா
2010-10-25 11:28:54 IST
நல்ல காமெடி சார் நீங்க, ஏங்க ஒரு தேர்தலிலாவது தனியா நின்னு காமிங்க பாக்கலாம்..தாங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது தெருவோரம் நின்று கொடுத்த வாக்குறுதிகளை யோசித்து பாருங்கள். என் குடம்பத்தினர் யாரும் பதவிக்கு வர மாட்டார்கள்... ஞாபகம் இருக்கா மருத்துவர் அய்யா அவர்களே......
பாண்டியன் - chennai,இந்தியா
2010-10-25 11:28:10 IST
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன். அட போயா நான் வீட்டுக்கு போறேன்....
சிவகுமார் - bangalore,இந்தியா
2010-10-25 11:18:28 IST
மாம்பழத்தை எல்லோரும் மிதித்து நசுக்கியதில் மாங்கொட்டை அழுகி விட்டது , அதை விதைத்தாலும் இனி முளைக்காது....
subha - mumbai,இந்தியா
2010-10-25 11:13:12 IST
you are responsible for this defect. first with aaidmk, then with dmk and then with congress and how many times you had changed ? hence no body, the people and you changed the fate of your party sorry your family party....
பாலா - தோஹா,கத்தார்
2010-10-25 10:56:54 IST
ராமதாஸ் தமிழ்நாட்டுக்கு செய்த வேலை மரம் வெட்டுதல், சாதி பெயரை சொல்லி மக்களை பிரித்தது, அமைச்சராய் இருந்து நாட்டை சுரண்டியது, அட்டையை போல மற்ற கட்சியுடன் ஒட்டிக்கொண்டு ஆட்சிக்கு வேட்டு வைப்பது, இன்னும் பல. நல்லதுன்னு எதாவது செய்தாரான்னு யோசிச்சு பார்க்க கூட முடியல. மக்களே இதுல இந்த வீணா போன ஆள பத்தி விமர்சனம் பன்னுனா மட்டும் போதாது. தேர்தல தோற்க்கடிக்கணும்....
சாதிக் பாட்சா - நெல்லைஅபுதாபி,இந்தியா
2010-10-25 10:49:43 IST
அன்ன காடு வெட்டி (வெட்டி) குருவை மறந்திட்டியா. அவர்தான் உங்க கட்சிக்கு மாலை போட்டு ரோட்டுக்கு கொண்டு வந்தார். முதலில் கொள்கையில் பிடிப்பாக இருக்க கத்துக்கணும். நன்றிக்கு என்ன அர்த்தம் இரண்டு குறளை எடுத்து பாருங்கள். தெரியவில்லை என்றால் கலைஞர் அவர்களிடம் கேளுங்கள் ....
கைப்புள்ள ரசிகன் - vandalur,இந்தியா
2010-10-25 10:47:32 IST

கருத்துகள் இல்லை: