திங்கள், 25 அக்டோபர், 2010

திமுக கூட்டணியிலிருந்து கழன்று கொண்டு போக காரணம் தேடுகிறதா காங்.?

Sonia and Karunanidhiசென்னை: காங்கிரஸ் முகாமிலிருந்து தொடர்ந்து சலசலப்பு. ஏதாவது ஒரு வகையில், யாராவது ஒருவர் மூலம் தொடர்ந்து சலசலப்பு கிளம்பிக் கொண்டே இருப்பது, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து போக ஏதாவது ஒருகாரணம் கிடைக்காதா என்று காங்கிரஸ் அலை பாய்வதாக எண்ணத் தோன்றுகிறது.

மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கூட்டணியில் முக்கியக் கட்சியாக திமுக உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவும் உள்ளன.

இங்குதான் முதல் சலசலப்பு ஏற்பட்டது. மத்தியில் திமுகவுக்கு ஆட்சியில் அதிகாரம் கொடுத்தோமே, மாநிலத்தில் ஏன் தரப்படவில்லை என்பது தமிழக காங்கிரஸ் காரர்களின் முதல் அதிருப்தி. அந்த அதிருப்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தபோதிலும், திமுகவின் சாணக்கியத்தனத்தாலும், காங்கிரஸ் காரர்களே முதலில் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டே இருப்பதாலும், வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சமீப காலமாக தொடர்ந்து காங்கிரஸ் முகாமிலிருந்து திமுகவை விமர்சித்தபடியே உள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரம்பித்து வைத்தார். அதை கார்த்தி சிதம்பரம் பிடித்துக் கொண்டார். இவர்கள் இருவரும் மாறி மாறி திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்தபடியே உள்ளனர்.

இதுகுறித்து திமுக தரப்பில் வெளிப்படையாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டதும், மேலிடத்திலிருந்து சமீபத்தில் ஒரு கண்டிப்பான உத்தரவு வந்தது. இதையடுத்து இந்த இரு தலைவர்களின் சுருதியும் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து சத்தம் போட்டபடிதான் உள்ளனர்.

தற்போது திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அவர்களுக்கு புதிய விஷயம் கிடைத்து விட்டது. அது திருமாவளவன். அவர் பாட்டுக்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் திருமாவளவன். ஈழத் தமிழர் விவகாரம் குறித்து அவர் பேசப் போக அதை வைத்து அவரை மிகக் கடுமையாக சாடினார் கார்த்தி சிதம்பம்.

இந்த இடத்தில் கார்த்தி குறித்தும் ஏதாவது சொல்லியாக வேண்டும். இதுவரை தமிழக மக்களுக்காகவும், தமிழக பிரச்சினைகளுக்காகவும், எள் முனை துரும்பைக் கூட கிள்ளிப் போடாத, போராட்டத்தில் கலந்து கொண்டு சட்டை கசங்காத, மக்களுக்காகப் போராடி வியர்த்து விறுக்காத ஒரே அரசியல் தலைவர் இவர் மட்டுமே. ஆனால் இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர்.

இப்படிப்பட்ட கார்த்தி, தமிழகத்தில் தலித் மக்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவரும், தலித் சக்தியின் தனிப்பெரும் தலைவராகவும் திகழும் திருமாவளவனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்த திருமா, தமிழகத்தில் காங்கிரஸை வளர்த்தது நேற்று வந்த தலைவர்கள் அல்ல, ஏன் இந்திரா, நேருவே கூட காங்கிரஸை தமிழகத்தில் வளர்த்ததில்லை. எனது பாட்டன் கக்கனும், அவரது தலைவர் காமராஜரும்தான் காங்கிரஸை வளர்த்தவர்கள். அப்படிப்பட்ட கக்கனை கடைசிக்காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் காய விட்டுக் கொன்றவர்கள் இந்த காங்கிரஸார் என்று சற்று காட்டமாகவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி சிலை அவமதிக்கப்படவே அத்தனை பழியையும் தூக்கி திருமாவளவன் மேல் போட்டு விட்டனர். மேலும் இதை சாக்காக வைத்து திமுகவையும் சீண்ட ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரஸ் தரப்பிலிருந்து இப்படி திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் சீண்டி வருவதைப் பார்க்கும்போது திமுக கூட்டணியிலிருந்து கழன்று செல்ல ஏதாவது ஒரு காரணம் கிடைக்கிறதா என்று முயல்வது போலவே தோன்றுகிறது.

நமது தொல்லை தாங்க முடியாமல், திமுக தரப்பிலிருந்து ஏதாவது கடுமையான கருத்து வரும், அப்படி வந்தால் அதைக் காரணம் காட்டி மேலிடத்தில் மூட்டி விட்டு கூட்டணியை விட்டு பிரிந்து போய் விடலாம் என்ற எண்ணத்தில் சில காங்கிரஸார் இருப்பது போலத் தோன்றுகிறது. இவர்களுக்கு மேலிடத்து ஆசியும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

அதாவது பட்டென்று சட்டையைக் கழற்றினால் பட்டன்கள் உடைந்து போய் விடும். பின்னர் மீண்டும் சட்டையை அணிய முடியாது. எனவே ஒவ்வொரு பட்டனாக கழற்றி, கடைசியில் சட்டையை கழற்றுவது போல காங்கிரஸின் செயல்பாடுகள் தெரிகின்றன. தேவைப்பட்டால் மீண்டும் சட்டையை போட்டுக் கொள்ளலாமே.

அரசியலாச்சே, எது வேண்டுமானாலும் நடக்கலாம்!
பதிவு செய்தவர்: நிலவன்
பதிவு செய்தது: 25 Oct 2010 6:02 pm
காங்கிரஸ் போன்ற அந்நியச் சக்திகளுக்குத் தமிழ்நாடு மட்டும்தான் வாய்ப்பான மாநிலம்.இங்கு மட்டும்தான் இவர்கள் பருப்பு அவியும்.தெலுங்கன்,கன்னடத்தி மாறி மாறி ஆட்சி அமைப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.வேறு இந்திய மாநிலங்களில் இந்தப் புலுடா சரிவராது.தமிழக மக்கள் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.தமிழா இனியும் இத் தவறை விடாதே.

பதிவு செய்தவர்: முரளி
பதிவு செய்தது: 25 Oct 2010 5:44 pm
தி.மு.க, பா.ம.க, வி.சி, ஆகியவை கூட்டனி அமைத்தால் போதும் தமிழகத்தில் தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும்.......
பதிவு செய்தவர்: ஒன்று கவனியுங்கள்
பதிவு செய்தது: 25 Oct 2010 5:21 pm
எல்லோரும் ஒன்றை கவனிக்கவேண்டும். இந்த காங்கிரஸ், கம்முநிஸ்ட், ப ம க, விடுதலை பன்னிகள், பி ஜே பி ,எம் டி எம் கே இவர்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைப்பது ஜெயா தான் .கருணாநிதி வேண்டுமென்றபோது தூக்கிவைத்து வேண்டாதபோது தூக்கி எறிவார்.இவர்களின் தகுதியை இவர்களுக்கு உணர்த்துவது ஜயாமட்டுமே. தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. மற்றதெல்லாம் பல்லக்கு தூக்கிகள்.குருமா கார்த்தி இளங்கோ ராமதாஸ் எல்லாம் பின்செல்பவர்களே.

பதிவு செய்தவர்: தி மு க கரன்
பதிவு செய்தது: 25 Oct 2010 4:32 pm
கோங்க்றேச்ச்சில் தலைவர்கள் தன அதிகம் .தொண்டர்கள் என்று யாரும் கிடையாது .விடுதலை சிறுத்தைகளை விட கோக்ரேச்ஸ் மிக பலவினமனது .திமுக ,பம்க் வீசி குட்டனி அம்மஞ்சலே வீற்றி பெற்று விடும் தி மு க

பதிவு செய்தவர்: அரிச்சந்திரன்
பதிவு செய்தது: 25 Oct 2010 4:16 pm
கார்த்தி இலங்கை தமிழர் பத்தி பேச அவசியம் இல்லை. அவன் ஒரு இந்தியன். காங்கிரஸ் அம்மாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும். அடுத்தது நம்ம அரசுதான். அதுக்கு அப்புறம் இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்.

பதிவு செய்தவர்: பாமரன்
பதிவு செய்தது: 25 Oct 2010 4:12 pm
திமுக ஆதிமுக தவிர தமிழ்நாட்டில் ஒருவருக்கும் செல்வாக்கு இல்லை. இந்த இரு கட்சிகளும் தான் மக்களோடு கலந்து பணியாற்றுகிறார்கள். காங்கிரஸ் தேதிமுக கஊடணி அமைந்தால் அந்த கஊடணி தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் வென்றால் பெரிய விஷயம்... இது மேலும் அந்த இரு கட்சிகளையே வலுபடுத்தும்.....

பதிவு செய்தவர்: பல்லவன்
பதிவு செய்தது: 25 Oct 2010 4:01 pm
காங்கிரஸ்காரன்லாம் குரல் உயர்த்தி பேசுகிறானென்றால் தலைவர் கலைஞர் அவ்வளவு வீக்காக ஆகிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

பதிவு செய்தவர்: மாற்றம் வேண்டி
பதிவு செய்தது: 25 Oct 2010 4:01 pm
கருணாநிதி மெஜாரிட்டி இல்லாமலே கூட்டணி ஆட்சி நடத்தாமல் சென்று விட்டார்.. அதன் பின் விளைவை அனுபவிக்கும் காலம் வரலாம்.. ஆனால் ஜெயலலிதா கருணாநிதியை விட படு மோசம் அவரிடம் செல்வது இயலாத காரியம்.. இது தான் இது தான் திமுகாவின் ப்ளஸ் பாய்ன்ட் ஆனால் தேதிமுகா உடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்தால் மாற்றம் தமிழகத்தில் நிச்சயம் வரும்

பதிவு செய்தவர்: கலை
பதிவு செய்தது: 25 Oct 2010 4:00 pm
தமிழக முதல்வர் கருணாநிதி தந்து சுய நலத்திற்காக கொன்கிரசுடன் இணைந்தே இருப்பார் வாக்கு இயந்திர மோசடி செய்பவர்கள் லவர்கள் தானே

பதிவு செய்தவர்: சுந்தர பாண்டியன்
பதிவு செய்தது: 25 Oct 2010 3:28 pm
எனவே ஒவ்வொரு பட்டனாக கழற்றி, கடைசியில் சட்டையை( ரவிக்கையை ) கழற்றுவது போல

கருத்துகள் இல்லை: