திங்கள், 25 அக்டோபர், 2010

புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தகர்க்க அமெரிக்க நிறுவனம் விசேட வேலைத்திட்டம் - இலங்கைத் தூதரகம் நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து இயங்கி வரும் நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ. நிறுவனம், அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து, விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனடிப்படையில், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், அதன் பரவல் குறித்தும் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினருக்கு சரியான முறையில் தெளிவுப்படுத்தவும், அவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு, தற்போது புலி ளின் பெயரைக் கைவிட்டு வேறு  பெயர்களில் அமைப்புகளை ஸ்தாபித்துள்ளது என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரம சூரிய தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களை சரியான முறையில் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்து, இதுதொடர்பான தெளிவுப்படுத்த வேண்டியது தூதரகத்தின் கடமை எனவும் அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக தூதரகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது எனவும் ஜாலிய விக்கிரம சூரிய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: