திங்கள், 25 அக்டோபர், 2010

Piyasena.MP விசுவாசம் இல்லாதவர்களுக்கு இராணுவ சீருடை அணிவித்து இராணுவ படையணிக்கு அனுப்புவேன்: பியசேன எம்.பி.

விசுவாசம் இல்லாமல் நடப்பது பற்றி நான் கேள்விப்பட்டேனாக இருந்தால் அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு வைத்தியசாலை சீருடையை அகற்றிவிட்டு இராணுவ சீருடை அணிவித்து இராணுவ படையணிக்கு மாற்ற நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடமைபுரியும் உத்தியோகஸ்த்தர்கள் மத்தியில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
150 வருடங்களின் பின்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதன்முறையாக ஓரு முஸ்லிம் வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்படவிருப்பது ஒரு கவலைதரும் விடையமாகும்.

ஒரு அதிகாரி தாம் கடமைபுரியும் இடத்தினை விட்டு வேறு இடத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும்போது அவர் நற்பெயருடன் செல்லவேண்டும்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவதாக அறிந்தவுடன் வைத்தியசாலைக்கு நேரில்சென்று நிலமையினை அவதானித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
உயர் அதிகாரிகளுக்கு கீழ்ப்பணிவுடனும் நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் செயற்யற்படவேண்டியது அங்கு கடமைபுரியும் ஏனைய உத்தியோகஸ்த்தர்களின் கடமையாகும்.
அதனை விடுத்து மொட்டைக்கடிதங்கள் போடுவது, துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவது, போன்ற தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அவ்வாறு செயற்படுபவர்கள் தரங்கெட்டவர்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் துணைபோக வேண்டாம். இந்தவைத்தியசாலையின் பிரச்சனையைத் துண்டுபவர்கள் இங்கு கடமைபுரிபவர்களில் ஒரு சிலராகத்தான் இருக்கின்றது.
நீங்கள் எவ்வளவோ செலவு செய்து படித்து கடமை புரியவந்துள்ளது இவ்வாறாக அவதூறுகளை பெறுவதற்கா?.
எனவே இருக்கின்ற அதிகாரிக்கோ அல்லது வருகின்ற அதிகாரிகளுக்கோ நம்பிக்கையாக நடந்து கொள்ளுங்கள் இனி மேலும் அவ்வாறு விசுவாசம் இல்லாமல் நடப்பது பற்றி நான் கேள்விப்பட்டேனாக இருந்தால் அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு வைத்தியசாலை சீருடையை அகற்றிவிட்டு இராணுவ சீருடை அணிவித்து இராணுவ படையணிக்கு மாற்ற நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: