திங்கள், 25 அக்டோபர், 2010

24 Hour அரச வைத்தியசாலைகளில் 24 மணி நேர வெளிநோயாளர் சிகிச்சை : ஜனாதிபதி பணிப்புரை


நாட்டின் சகல அரச வைத்தியசாலைகளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயாளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகள் பரிசோதனைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் சகல வைத்தியசாலைகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: