செவ்வாய், 22 ஜூன், 2010

மதராஸபட்டினம்- உதயநிதி; நான் மகான் அல்ல-தயாநிதி!

பெரும் பொருட்செலவில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க ஆர்யா-எமி நடித்துள்ள மதராஸபட்டினம் படத்தை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

'கிரீடம்' விஜய் இயக்கியுள்ள இந்தப் படம், 1940களில் இருந்த சென்னையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை, உருவாக்கம், பாடல்கள் மற்றும் விளம்பரம் போன்றவை இந்தப் படம் குறித்து நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தைப் பார்த்த உதயநிதி, மிகவும் திருப்தியுடன் தயாரிப்பாளர் கேட்ட விலையைக் கொடுத்து விற்பனை உரிமையை வாங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில் வெளியிடவிருக்கிறார்.

ஜூலை 2ம் தேதி வெளியாகிறது மதராஸபட்டினம்.

நான் மகான் அல்ல-தயாநிதி வாங்கினார்!

இதற்கிடையே கார்த்தி- காஜல் அகர்வால் நடித்துள்ள நான் மகான் அல்ல படத்தை தயாநிதி அழகிரி தனது க்ளவுட் நைன் மூவீஸுக்காக வாங்கியுள்ளார்.

வெண்ணிலா கபடிக் குழு இயக்குநர் சுசீந்திரனின் இரண்டாவது படம் இது. கார்த்தி நடித்த பையா படத்தையும் தயாநிதிதான் வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 22 Jun 2010 3:42 pm
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்

பதிவு செய்தவர்: வெட்டி
பதிவு செய்தது: 22 Jun 2010 3:38 pm
யாரு வீட்டு காசு... கடவுளே இந்த கொடுமையை யாரும் இல்லையா.. தமிழர்கள் மிகவும் அடிமையாய் இருக்கிறார்கள்


கருத்துகள் இல்லை: