திங்கள், 21 ஜூன், 2010

ரகுமான் திடீர்' என மேடை சரிந்து விழுந்தது. 10 பேருக்கு காயம்

ஜெய்கோ உலக இசைப் பயணம் என்ற பெயரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக இசைப் பயணத்தை அமெரிக்காவில் துவங்கி உள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உலக இசைப் பயணத்துக்கு அமெரிக்காவில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

நியூயார்க் நகரில் தனது முதல் இசைப் பயணத்தை துவங்கிய ஏ.ஆர்.ரகுமான், பின்னர் நியூஜெர்சி, விஜென்யா ஆகிய இடங்களில் நடத்தினார். முதல் மூன்று இசை நிகழ்ச்சிகளை ஏறத்தாழ 40 ஆயிரம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இசையமைத்து பாடிய பிரபலமான 'சையா சையா', 'அரபிக் கடலோரம்' ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியை நடத்தும் ரகுமான், லண்டனில் தனது இசைப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக, சில்வர்டோர் என்ற இடத்தில் உள்ள பிரபல அரங்கில் மேடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், திடீர்' என மேடை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேடை சரிந்ததால், இன்று நடப்பதாக இருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: