வெள்ளி, 22 செப்டம்பர், 2023

கனடா - இந்தியா பிரச்சனை: இந்திய ஐடி நிறுவனங்களின் நிலைமை இதுதான்.. ஐடி ஊழியர்களே உஷார்..

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh  : இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை கடந்த சிலமாதங்களாக இருந்து வந்தாலும், டெல்லியில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல வெடிக்க துவங்கி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டியதில் இருந்து பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது.
இதன் மூலம் இந்தியா - கனடா அரசு பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுத்து வருவதால் இரு நாடுகள் மத்தியிலான உறவு என்பது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கனடாவில் இருக்கும் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள், இந்திய மாணவர்களுக்கு கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை விட முக்கியமாக கனடாவில் இருக்கும் இந்தியாவில் பிரச்சனை நடக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா - கனடா நட்புறவில் அதிகம் பாதிக்கப்படும் துறையாக இந்திய ஐடி சேவை துறை இருக்கும் வேளையில், இதுக்குறித்து ஐடி சேவை துறையின் தலையாய அமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நாடுகள் மத்தியிலான பிரச்சனையில் கீழ் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும் நிலைமை ஏதுமில்லை எனவும், இதுகுறித்து கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் நாஸ்காம், கனடாவில் இருக்கும் எங்களுடைய உறுப்பினர்களிடம் இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை மற்றும் அதன் மூலம் இந்தியா ஐடி சேவை துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டோம். உடனடியாக பாதிப்பு ஏற்படும் நிலை ஏதுமில்லை என தெரிவித்துள்ளதாக நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாஸ்காம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டாலும், கனடா நாட்டு ஐடி நிறுவனமான Resson Aerosace தானாக முன்வந்து கூட்டணி ஒப்பந்ததை முறித்துக்கொண்டதாக வியாழக்கிழமை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமம் ரெஸ்ஸோ நிறுவனத்தில் வைத்திருந்த 11.18 சதவீத பங்குகளுக்கு இணையான 4.7 மில்லியன் கனடா டாலர்கள் பணத்தை அனுப்பியுள்ளது.

இந்தியா - கனடா பிரச்சனைக்கு மத்தியில் Resson Aerosace நிறுவனம் ஒரே நாளில் முதலீட்டு ஒப்பந்த முறிவுக்கு விண்ணப்பம் செய்து ஒரே நாளில் அந்நாட்டு அரசு அமைப்பில் ஒப்புதல் பெற்று, பணத்தையும் திருப்பி அனுப்பியுள்ளது. இந்தியா - கனடா நட்புறவில் ஏற்பட்டு உள்ள விரிசலில் முதல் பாதிப்பு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் முதலீட்டு ஒப்பந்த முடிவுக்கு ரெஸ்ஸோ ஏரோஸ்பேஸ் எவ்விதமான காரணமும் செல்லாதது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

கருத்துகள் இல்லை: