tamil.oneindia.com - nbsp; Vigneshkumar : ublished: சென்னை: சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றிருந்தார். அத்துடன் பிரச்சினை முடிந்தது என நினைத்த நிலையில், நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல் விடுத்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து சீமானை நேரில் ஆஜராகும்படியும் போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்று பெங்களூருக்குத் திரும்பினார் நடிகை விஜயலட்சுமி.நடிகை விஜயலட்சுமி: புகாரை வாபஸ் பெற யாரும் தன்னை மிரட்டவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நெருங்கவே முடியாத அளவுக்குச் சீமான் பவர்புல்லாக இருப்பதாகவும் சீமானிடம் பேசிவிட்டே புகாரை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் அவர் பெங்களூருக்கும் புறப்பட்டுச் சென்றார். அத்துடன் இந்த பிரச்சினை முடிந்துவிட்டதாகவே பலரும் கருதினர். இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல் விடுத்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகை விஜயலட்சுமி, "அனைவருக்கும் நான் மற்றொரு விஷயத்தையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. கடந்த மார்ச் மாதம், மதுரை செல்வத்தை வைத்து சீமான் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாசம் நான் 50 ஆயிரம் கொடுத்து விடுகிறேன்.. சென்னைக்கு வர வேண்டாம் வேண்டாம்.. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு வந்தால் போதும் எனச் சீமான் என்னிடம் சமாதானம் பேசினார்.
மிரட்டல்: அதன்படி மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாதாமாதம் ரூ.50 ஆயிரம் போட்டார்கள். அதேநேரம் கடந்த 4 மாதங்களாக முன்பு கணவன்- மனைவியாக இருந்த போது நாங்கள் எப்படி பேசிணுமோ அதேபோல பேசி என்னிடம் வீடியோக்களையும் வாங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் மட்டும் இப்படி வீடியோக்களை அனுப்பி வந்தேன். இருப்பினும், சீமானிடம் இருந்து எந்தவொரு வீடியோவும் வரவில்லை. எனது அக்காவின் பிறந்த நாளுக்கு மட்டும் சீமான் ஒரு ஆடியோ அனுப்பினார்.
இது குறித்து நான் மதுரை செல்வத்திடம் கேட்டேன். என்ன நான் மட்டும் ஆடியோ அனுப்புகிறேன்.. சீமான் எதையும் அனுப்புவதே இல்லை என்று கேட்டேன். அப்போது திடீரென தான் ஒரு கோடி கொடுத்துள்ளதாக ஆடியோ அனுப்பி மிரட்ட ஆரம்பித்தார் மதுரை செல்வம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நோய்வாய்ப்பட்டிருந்த எனது சகோதரியை அழைத்துக் கொண்டு நான் சென்னைக்கு வந்து புகார் அளித்தேன்.
சீமானை விடுங்க.. மதுரை செல்வத்திடம் கூட விசாரணை நடத்தவில்லை. போலீசாரும் அவர் குறித்து எங்கும் பேசவில்லை. சீமான் கூட மதுரை செல்வம் குறித்து எதுவும் பேசவில்லை. இப்போது என் மீது மனநஷ்டஈடு வழக்கு போவதாகச் சொல்கிறார்கள். நான் சென்னையில் வாழ வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.. ஆனால், இப்போது சென்னை பக்கமே வர மாட்டேன் எனச் சொல்லிவிட்டு வரும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.
தற்கொலை மிரட்டல்: நான் மன்னித்து விட்டபடி அனைவரும் விட்டுவிட்டால் ஓகே.. இப்போதும் அந்த வழக்கு போடுவேன்.. மனத்தை வாங்குவேன் என மிரட்டினால்.. எனது சகோதரி உயிரை முடித்துக் கொண்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன். இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதையும் எழுதி வைத்துவிடுவேன். நான் சும்மா மிரட்டுவதாக நினைக்காதீர்கள்.. நான் போலீஸ் நிலையத்தில் புகாரை வாபஸ் பெறுவேன் என யாரும் நினைக்கவில்லை.
அதேபோல ஓவராக டார்ச்சர் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன். என்னை அந்த சூழ்நிலைக்குத் தள்ளாதீர்கள். என்னை மட்டும் சுட்டுக் காட்டும் அளவுக்கு இங்கே யாரும் பர்பெக்ட் இல்லை. எல்லா பக்கமும் தவறு இருக்கிறது. எல்லாரும் எனக்கு டார்ச்சர் செய்துள்ளனர். நான் தான் பெருந்தன்மையுடன் அனைவரையும் மன்னித்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக