ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

விபத்தில் சிக்கிய யூ டியூபர் டிடிஎஃப் வாசன்- ஐசியூவில் திவிர சிகிச்சை

maalaimalar :மாலைமலர் :  சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார். டிடிஎஃப் வாசன்
சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடி எஃப் வாசன் சாலை விபத்தி சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவைக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.
கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முன் சென்ற வாகன்ததை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார். டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படத்தின் நிலை என்ன என்பதும் கேள்வி குறியாக உள்ளது.

கருத்துகள் இல்லை: