tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அறிவித்தார்.
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.
எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன்.
ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார் என்றார்.ஜெயக்குமார் பிரஸ் மீட் விரிவாக: சென்னையில் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பின்னர் அண்ணாவை பற்றி, பெரியாரை பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுகிறார் அண்ணாமலை.
டெல்லி சொல்லிதான் நடக்கிறது: எங்களுடைய முன்னோடிகளை விமர்சனம் செய்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள். ஒரே விஷயம்தான் மேலே சொல்லியும் இவரு அடங்கமாட்டார் எனில் மேலே சொல்லித்தானே நடக்கிறது. தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதைத்தான் இப்போது சொல்ல முடியும். எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து கேள்வி கேளுங்க.
வேஸ்ட் லக்கேஜ் பாஜக: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போனால் எங்களுக்கு இழப்பு இல்லை. அவர்களுக்குதான் இழப்பு. பாஜக என்பது அதிமுகவுக்கு வேஸ்ட் லக்கேஜ்; எக்ஸ்ட்ரா லக்கேஸ் அல்ல.
மேலே சொல்லித்தான் நடக்கிறது: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் நோட்டாவை கூட தாண்ட முடியாது. அத்தனைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. மேலே சொல்லியும் நடக்கவில்லை எனில் என்ன செய்வது? கூட்டணி தர்மத்தை மீறித்தான் அண்ணாமலை பேசி வருகிறார்.
திமிர், தகுதிக்கு மீறிய பதவி: அண்ணாமலைக்கு திமிர் பிடித்துவிட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு தகுதியானவர் அல்ல அணாமலை. அண்ணாமலைக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சிங்க கூட்டத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
பேர்லயே அண்ணாவ வச்சிகிட்டு அண்ணாதுரையை அண்ணாமலை இப்படி விமர்சிக்கலாமா.. ஜெயக்குமார் மீண்டும் கண்டனம் பேர்லயே அண்ணாவ வச்சிகிட்டு அண்ணாதுரையை அண்ணாமலை இப்படி விமர்சிக்கலாமா.. ஜெயக்குமார் மீண்டும் கண்டனம்
நோட்டாவை தாண்டவே முடியாது: தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது. அதிமுக மூலம்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடையாளம் உள்ளது. பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது. அதிமுகவின் இந்த அறிவிப்பால் பாஜக மூத்த தலைவர்கள் சந்தோசப்படுவார்கள்.
கோப்பு பூச்சாண்டிக்கு பயம் இல்லை: எந்த பூச்சாண்டிக்கும் பயப்படுகிற கட்சி அதிமுக அல்ல. இந்த கோப்பு, பைல் என எத்தனையோ பார்த்துவிட்டோம். கோப்பு, பைல் என எத்தனையோ பார்த்திருக்கிறோம். உங்களுக்குதான் கோப்பு, பைல் என எதுவும் தெரியாதவர்கள். அண்ணாமலை ஒரு கோழை. அண்ணாமலை நோட்டாவைத்தான் ஜெயிக்க வேண்டும்.
கூட்டணி கிடையவே கிடையாது: கூட்டணி தர்மத்தை மீறக் கூடிய ஒருவரை அதிமுக தொண்டர்கள் மதிக்க வேண்டிய தேவை இல்லை. தன்மானத்தின் அடிப்படையில் அதிமுக தொண்டர்கள் தாங்கமாட்டார்கள். அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்கிற நிலைப்பாட்டைத் திரும்ப திரும்ப சொல்கிறோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக