சனி, 23 செப்டம்பர், 2023

NEET_சனாதனம் அதிர்ச்சி வைத்தியப் பதிவு

அந்தணன், க்ஷத்திரியன், வைசியன் ஆகியவர்களில் ஒருவன், நல்ல குலத்தில் தோன்றியவன், தக்க பருவத்தில் உள்ளவன், சாஸ்திர முறைப்படி நடந்து கொள்ளக் கூடியவன், சூரன்,உடலும் மனமும் தூய்மையாகக் கொண்டவன், நன்னடத் தையைப் பின்பற்றுபவன், புலனடக்கம் உள்ளவன், வரும் பொருளைக் கண்டறிந்து சாஸ்திர அர்த்தங்களை நன்கு உணர்ந்து கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவன். நல்ல அமைப்புடன் கூடிய நாக்கு,உதடுகள்,பல் வரிசைகள் முதலியவற்றைக் கொண்டவன், தெளிவான சிந்தனை, சொல், செயல்கள் உடையவன், கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவன் எனுமிவர்களை மருத்துவக் கல்வியை உபதேசம் செய்ய (உபநயனம்) அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
May be a doodle of text that says 'NEET- ET-சனாதனக் கல்வி! அந்தணன், கூத்திரியன், வைசியன் ஆகியவர்களில் ஒருவன், நல்ல குலத்தில் தோன்றியவன், தக்க பருவத்தில் உள்ளவன், சாஸ்திர முறைப்படி நடந்து கொள்ளக் கூடியவன், சூரன், உடலும் மனமும் தூய்மையாகக் கொண்டவன், நன்னடத்தையைப் பின்பற்றுபவன், புலனடக்கம் உள்ளவன், வரும் பொருளைக் கண்டறிந்து சாஸ்திர அர்த்தங்களை நன்கு உணர்ந்து கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவன்,நல்ல அமைப்புடன் கூடிய உதடுகள் பல் வரிசைகள் முதலியவற்றைக் கொண்டவன், தெளிவான சிந்தனை, சொல், செயல்கள் உடையவன், கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவன் எனும் இவர்களை மருத்துவக் கல்வியை உபதேசம் செய்ய (உபநயனம்) அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டும். -ஸசுருத ஸம்ஹிதை-மத்திய அரசின் ஆயுர்வேத பாட நூல்'

Dhinakaran Chelliah  :  சனாதனம் அறிவோம்(பாகம் 13)
NEET_சனாதனம்
அதிர்ச்சி வைத்தியப்  பதிவு
நீங்க நீட்டுக்கு (NEET) க்கு ஆதரவாளராக இருந்தாலும் எதிர்ப்பாளராக இருந்தாலும் தயவு செய்து இந்தப் பதிவைப் வாசிக்கவும்.
ஆயுர் வேதத்தின் தந்தை என்றும் உலகின் அறுவைச் சிகிச்சையின் தந்தை என்று ஸுசுருதர் போற்றப்படுகிறார். இவரது பெயரில் வழங்கி வரும் ஸுசுருத ஸம்ஹிதை எனும் நூலானது ஆயுர் வேத நூல்களில் தலை சிறந்தது.இந்த நூல் ஆயுர்வேத மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மத்திய அரசின் பாடத் திட்ட நூல்களில் முதன்மையானது.
ஆமா,NEET தேர்வுக்கும் ஸுசுருதருக்கும் என்ன சம்பந்தம்? முழுமையாக இந்தப் பதிவைப் வாசிக்கிறவர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.


ஸுசுருதர் என்ற பெயரில் இருவர் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விசுவாமித்திரரின் புதல்வரும் தன் வந்தரியின் சீடருமான ஸுசுருதர் விருத்த ஸுசுருதர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு ஸுசுருத ஸம்ஹிதையை இயற்றிய முதலாம் ஸுசுருதராவார். இரண்டாம் ஸுசுருதர் முதல் ஸுசுருதர் எழுதிய நூலில் ஆங்காங்கு ஆராய்ந்து திருத்தம் செய்து அதையே புது உருவம் கொடுத்து வெளிக்கொணர்ந்தார்.
ஸூத்திர ஸ்தானம், நிதானஸ்தானம், சாரீரஸ்தானம், சிகிச் சாஸ்தானம், கல்பஸ்தானம் என 120 அத்தியாயங்கள் கொண்டு 5 ஸ்தானங்களுடன் முற்று பெறாத இருந்த இந்நூலுடன் நாகார்ஜுனன் என்பவர் இந்நூலில் கடைசி பாகமாகிய உத்தரஸ் தானத்தை இயற்றி இணைத்து இந்நூலுக்கு பூரண உருவம் தந்து நிறைவு பெறச் செய்தார்.
பிறகு சந்திரடர் என்பவர் பூரண உருவம் பெற்ற இந்நூலில் சில பாடங்களை திருத்தியும் புகுத்தியும் புதுப்பித்து புதிய பொலி வுடன் உருவாக்கினார். இதுதான் இன்று நாம் போற்றிக் கற்று வரும் ஸுசுருதஸம்ஹிதையாகும்.
ஆத்ரேயர், அக்னிவேசர், சரகர், த்ருடபலர் என வருடைய கூட்டுப்பொறுப்பில் சரகஸம்ஹிதை உருவாகி அது நால் நால்வருடைய சம்பந்தத்தையும் பெற்றது போல், விருத்த ஸுசுருதர்,இரண்டாம் ஸுசுருதர், நாகார்ஜுனன், சந்திரடர் என நால்வருடைய கூட்டுப்பொறுப்பில் உருவாகிய ஸுசுருத
ஸம்ஹிதையில் இந்நால்வரும் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
இந்நூலுக்கு உரை எழுதியவர் பலர். அவற்றுள் கயதாஸ் (கி.பி.11) எழுதிய நியாயசந்திரிகா,சக்ரபாணி தத்தர் (கி.பி.11) எழுதிய பானுமதி, டல்ஹணர் (கி.பி.12) எழுதிய நிபந்தசங்கிரஹம், ஹாராணசந்திரன் (கி.பி.18) எழுதிய ஸுசுருதார்த்த ஸ்ந்தீபனம் போன்ற உரைகள் புகழ் பெற்று அனைவராலும் போற்றப்பட்டு முக்கியமாய் விளங்குகின்றன.
இந்த விபரங்களை எஸ்.என்.ஶ்ரீராமதேசிகன் (கவுரவத் தனி அலுவலர்,இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குநரகம்) அவர்கள் தமிழாக்கம் செய்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள “ஸுசுருத ஸம்ஹிதை (முதற்பகுதி)” நூலில் அறிந்து கொள்ளலாம்.
இந்த நூலில் உள்ள சில பகுதிகளை உங்கள் பார்வைக்கு;
1.சீடனின் இலக்கணம்:
“சிஷ்யோபநயனீயம்” அதாவது,ஆயுர்வேத மருத்துவம் கற்றுக்கொள்ள சீடனுக்கு வேண்டிய தகுதி இலக்கணம் பற்றி தன்வந்திரியின் உபதேசம்:
அந்தணன், க்ஷத்திரியன், வைசியன் ஆகியவர்களில் ஒருவன், நல்ல குலத்தில் தோன்றியவன், தக்க பருவத்தில் உள்ளவன், சாஸ்திர முறைப்படி நடந்து கொள்ளக் கூடியவன், சூரன்,உடலும் மனமும் தூய்மையாகக் கொண்டவன், நன்னடத் தையைப் பின்பற்றுபவன், புலனடக்கம் உள்ளவன், வரும் பொருளைக் கண்டறிந்து சாஸ்திர அர்த்தங்களை நன்கு உணர்ந்து கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவன். நல்ல அமைப்புடன் கூடிய நாக்கு,உதடுகள்,பல் வரிசைகள் முதலியவற்றைக் கொண்டவன், தெளிவான சிந்தனை, சொல், செயல்கள் உடையவன், கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவன் எனுமிவர்களை மருத்துவக் கல்வியை உபதேசம் செய்ய (உபநயனம்) அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. உபநயன முறை:
ஆயுர்வேதத்தை உபதேசிக்கும் ஆசிரியர், சோதிட வல்லுநரால் குறிப்பிடப்பட்ட நல்ல திதி, முகூர்த்தம், நட்சத்திரம் உள்ள நன்னாளில், கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியவராய் மேடு பள்ளமின்றிச் சமமாக நான்கு மூலைகள் உள்ள ஹோமம் செய்யத்தக்க இடத்தில் தர்பைகளைப் பரப்ப வேண்டும். அந்த இடம் சாணம் கொண்டு மெழுகப் பட்டு இருக்க வேண்டும். தேவர்களை மலர்கள், பொரி, அன்னம், இரத்தினம் முதலியவற்றால் பூசை செய்து அந்தணர்களையும் மருத்துவர்களையும் வணங்க வேண்டும்.
3. ஆயுர்வேதம் கற்கத் தகுதியுள்ளவர்கள்:
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்களுக்கு அந்தணரும். க்ஷத்திரிய வைசியருக்கு க்ஷத்திரியரும். வைசியர்களுக்கு வைசியரும் உபநயனம் செய்யத்தக்கவராவர்.வமிச பரம்பரையாக மருத்துவம் புரியும் குலத்தில் தோன்றி. முன் கூறப்பட்ட குணங் களைக் கொண்ட நான்காம் வருணத்தவராயினும் அவரும் மருத்துவம் கற்கத் தக்கவரே என்பது ஆசாரியர்களின் கருத்து.
4.நோயளிகளிடம் சீடன் நடந்து கொள்ள வேண்டிய முறை:
அந்தணர்கள், குருமார்கள், ஏழைகள் நண்பர்கள்,சன்யாசிகள், தம் சன்னதியில் அன்புடன் நடந்து கொள்பவர்கள், நல்லவர்கள், அநாதைகள், வெகுதூர தேசத்திலிருந்து வந்து தன்னால் அருகில் (சிகிச்சைக்காகச்) சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் ஆகியவர்களைத் தம் உறவினர் போல எண்ணித் தக்க மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும். பணவரவு இருந்தாலும் வேடர்கள், பறவைகளைக் கொல்பவர், நல்லொழுக்கம் அற்றவர். கடும் பாபச் செயல்களைப் புரிபவர் ஆகியவர்களுக்கு மருத்துவர் சிகிச்சைக்கான (பணிவிடைகளைச்) செயல்முறைகளை பயன்படுத்தக் கூடாது.
5.ஆயுர்வேத நூல் கற்கக் கூடாத நாட்கள்:
மயானத்திலும், வாகனங்களின் மீது ஏறிய போதும், பிராணிகளைக் கொல்லும் இடத்திலும், போர்க்காலத்திலும், விழா நாட்களிலும், நில நடுக்கம் முதலிய இயற்கை மாறுபாடுகள் தோன்றிய போதும், மற்றும் அந்தணர்கள் வேதம் கற்காத நாட்களிலும், தான் தூய்மையற்று (தீட்டு நேர்ந்துள்ள) போதும் மருத்துவ நூலைப் பயிலக் கூடாது.
6.விரண (காயம்/புண்)நோயாளிக்குக் காப்பு:
குடத்தில் உள்ள நீரை நோயாளியின் மேல் தெளித்துக் கொண்டே காப்புக்கு உரிய 'கிருத்யானாம் பிரதிகாரார்த்தம், என்று தொடங்கும் மந்திரங்களை ஜபம் செய்தல் வேண்டும்.
செய்வினைகளால் ஏவப்படும் ‘கிருத்யை’ (செய்வினை) முதலான அரக்கர்களை விரட்டவும், மற்ற அரக்கர்களால்
தோன்றும் அச்சத்தைப் போக்கவும், இந்த நோயாளிக்குக் காப்பு கூறுகிறேன். பிரும்மா இதை ஒப்புக் கொள்வாராக.
நாகர்கள், பிசாசுகள், கந்தர்வர்கள், பித்ருதேவதைகள்,இயக்கர்கள், அரக்கர்கள் இவர்களில் யார் உன்னைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களை பிரும்மா முதலான தேவர்கள் அழிப்பார்களாக.(பின்னர் விரிவான ஒரு பதிவில் எழுதுகிறேன்)
7.கெட்ட மருத்துவனின் இலக்கணம்:
துவக்க நிலையில் அறுவைச் சிகிச்சையும், பக்குவம் அடைந்த வீக்கத்தை அலட்சியமும் செய்யும் மருத்துவர்கள் சரியான மருத்துவ அறிவின்மையால் நோயாளிக்கு
தீங்கிழைப்பவராவார்கள். ஆகையால் தன் கடமையை உணராது செயலாற்று பவர்கள் சண்டாளர்களுக் கொப்பானவர்கள்.
8.கெட்ட கனவுக்குக் கழிவுச் செயல் (சாந்திமுறை):
முன் கூறியபடி கெட்ட கனவுகள் காணப்பட்டால் மனிதன் அதிகாலையில் விழித்துக் கொண்டு முயன்று. உளுந்து. எள். இரும்பு, தங்கம் எனும் இவற்றை நற்பண்புள்ளவர்(அந்தணர்) களுக்குத் தானம் கொடுக்க வேண்டும். மேலும் நன்மை விளை விக்கும் மந்திரங்களையும், காயத்திரிமந்திரத்தையும் ஜெபம் செய்ய வேண்டும்.
கெட்ட கனவு வந்தால், பிறகு மூன்று இரவுகளைக் கோயிலில் கடத்த வேண்டும். அந்தணர்களை நாள்தோறும் வணங்க வேண்டும். இவ்வாறு சாந்தி செய்வதால் கெட்ட கனவு பயனற்றுப் போகும்.
9.நன்மையைத் தெரிவிக்கும் கனவுகள்
இனி நன்மையைத் தெரிவிக்கும் கனவுகளை விளக்குவோம். தேவதைகள், அந்தணர்கள், உயிருடன் உள்ள நண்பர்கள். சாதுக்கள் அரசர்கள் ஆகியோரையும் மற்றும் பசு. எருதுகள்,எரிந்து கொண்டிருக்கும் தீ, தெளிந்த நீர் ஆகியவற்றையும் கனவில் காண்பவன் நன்மை பெறுவான். அவனுக்கு நோய் தீரும். மாமிசம், மீன், வெண்ணிற மலர் மாலைகள், ஆடைகள்,பழங்கள் ஆகியவை கனவில் காணப்பட்டால் நன்மையும், உடல் நலனும் உண்டாகும். பெரிய மாளிகைகள், பழமுள்ள மரங்கள், யானை, மலை முதலியவற்றைக் கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும். செல்வம் வளரும். நோய் நீங்கும்.
பெருவெள்ளம் கொண்டவையும் சேறாக இருப்பவையுமான ஆறுகள் மற்றும் கடல் முதலியவற்றைத் தாண்டுதல் நோய் தீருவதைக் குறிக்கும். பாம்பு, அட்டைப்பூச்சி, வண்டு ஆகியவை தன்னைக் கடிப்பது போன்ற கனவுகளைக் கண்டால் நோய் அகலும். செல்வம் வளரும். நோயாளி இத்தகைய கனவுகளைக் கண்ட ல் பல்லாண்டுகள் வாழ்வான். அத்தகையவருக்குச் சிகிச்சை செய்வது வெற்றி தரும். எனவே சிகிச்சையைத் துவங்கலாம்.(கனவில் பாம்பு கடித்தால் நல்லது என வயதானவர்கள் சொல்வது இந்த நூலின் அடிப்படையிலும் இருக்கலாம்)
10.மரண அறிகுறி:
குளித்த உடனே மார்புப்பகுதி முதலில் உலர்ந்து போதல், மண்கட்டியோடு மற்றொரு மண் கட்டியையோ, ஒரு கட்டையுடன் மற்றொரு கட்டையையோ அடித்துக் கொண்டிருத்தல், புல்லைக் கிள்ளிக் கொண்டிருத்தல், கீழ் கொண்டிருத்தல், மேல் உதட்டைக் கடித்துக் உதட்டை நாவினால் நக்கிக் கொண்டிருத்தல். காது அல்லது தலை முடியை பிடுங்குவது போல இழுத்துக் கொண்டிருத்தல் எனும் இலக்கணங்கள் உள்ளவன் மரணம் நெருங்கியுள்ளவனென அறிக.
தேவதைகள், வேதம் வல்ல அந்தணர்கள். சான்றோர்கள்,உற்ற நண்பர்கள், மருத்துவர்கள் ஆகியோரை வெறுப்பவன், அவன் பிறந்த இராசி நட்சத்திரங்கள் கொடூரமான கோள்களால் பார்க்கப்படுதல் அல்லது கேடு விளைவிக்கும் இடங்களி லிருந்து துன்புறுத்தப்படுதல், ஆகாயத்தில் எரி நட்சத்திரம், இடி முதலியன தோன்றுதல், வீடு, மனைவி. படுக்கை, இருக்கை, இரதம், வண்டி முதலிய வாகனங்கள், விலையுயர்ந்த இரத் தினம், முத்து, பவளம், வஸ்துக்கள் விகாரமடைதல் ஆகிய இலக்கணங்கள் அவனுடைய ஆயுள் காலமுடிவை உணர்த்துவ தாகும்.
11.அகால மரணம்:
மரணம் நூற்றிரண்டு வகைகள் என அதர்வ வேதம் அறிந்த பெரியவர்கள் கூறுகின்றனர். அவற்றில் ஒன்று காலத்தோடு (ஆயுள் முடிந்து போவதால்) ஏற்படும் மரணம் என்றும், மற்றவை (நஞ்சு, தீ முதலியவற்றால்) காலமற்ற காலத்தில் (ஆயுள் இருந் தாலும் விபத்து நேர்வதால்) தோன்றும் மரணமென்றும் அறிக.
இரஸசாஸ்திரமறிந்த மருத்துவனும், மந்திரமறிந்த புரோகிதனும், வாதம் முதலிய தோஷங்களாலும், விஷம் தாக்கப்படுதல் முதலியவற்றாலும் நேரக்கூடிய மரணத்திலிருந்து மிக்க முயற்சி செய்து மன்னனைப் பாதுகாக்க வேண்டும்.
12.புரோகிதனின் மகிமை:
பிரமனின் படைப்பாக வேதத்தின் உறுப்பாகிய (அட்டாங்கம் என எட்டுப் பிரிவுகளுடன் கூடிய) ஆயுர்வேதம் தோன்றிற்று. எனவே வேதத்தின் உறுப்பாகிய ஆயுர்வேதத்தை அறிந்த மருத்துவனை விட வேதத்தை அறிந்த அந்தணனாகிய புரோகிதனே சிறப்பானவன். ஆகவே அறிவுள்ள மருத்துவன் புரோகிதனின் ஆலோசனையையும் கேட்டறிந்து தக்க முறையைப் பின்பற்ற வேண்டும்.
13.அரசனைப் பாதுகாக்காவிடில் நேரும் துன்பங்கள்:
மன்னனுக்கு நோய் முதலியவற்றால் துன்பம் நேர்ந்தால், சாதிகள் ஒன்றோடொன்று கலந்து விடுதல், குலம், சாதி முதலியவற்றைச் சார்ந்த சடங்குகள் நடைபெறாமல் அழிதல்.
உழவு, வாணிபம் முதலியவவை சீராக நடைபெறாமை,மக்களுக்கு அழிவு முதலிய கேடுகள் விளையும்.
பல வருடங்களாக நான் எழுதி வருவது போல் எல்லா வைதிக சனாதன நூல்களும், அது வேத நூல்களையொட்டி எழுதப்பட்ட உபநிடதங்களாக இருக்கலாம்,புராண இதிகாசங்களாக இருக்கலாம்,பக்தி இலக்கியங்களாக இருக்கலாம்,ஆகம நூல்களாக இருக்கலாம்,தர்ம சாஸ்திர நூல்களாக இருக்கலாம்,உணவு முறை பற்றிய பாக சாஸ்திரமாக இருக்கலாம்,இசை நூல்களாக இருக்கலாம்,கலைகளைப் பற்றிய நூல்களாக இருக்கலாம்,நீதி நூல்களாக இருக்கலாம்,ஆன்மீக நூல்களாக இருக்கலாம்,மருத்துவ நூல்களாக இருக்கலாம் எல்லாமே வர்ணாசிரம அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த நூல்கள் எல்லாவற்றிலும் சூத்திரன் வரையிலும் தர்மம் சொல்லப் பட்டுள்ளது,அதுவும் வேறு வழியில்லாமல் அவனது உழைப்புத் தேவைப்பட்டதினால். வர்ணத்தில் இல்லாத சண்டாளர்கள் பஞ்சமர்கள்,பதிதர்கள்,புலையர்களுக்கு எந்த தர்மமோ,நியமமோ,கர்மாவோ,
அனுஷ்டானங்களோ,சம்ஸ்காரங்களோ,
பரிகாரமோ,செய்முறை,குலமுறை,பத்யதி,
சுப மற்றும் அபர கர்ம முறைகளோ எதுவுமே சொல்லப்பட வில்லை. காரணம் அவர்களை வைதிகர்கள் தங்களது எதிரிகளாகவே பாவித்து வந்துள்ளனர்.
ஆதலால்தான் இந்த மக்களுக்கும் வைதிக சனாதனத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை என உறுதியாக எடுத்துரைக்கிறேன்.
எந்த ஒரு கீழ்நிலையானவர்களை,
கொடியவர்களை உதாரணம் சொல்வதற்கு சண்டாளர்களையே எடுத்துக் காட்டாக வைதிக நூல்களில் கூறப்பட்டுள்ளது, மேலுள்ள ஸுசுருத ஸம்ஹிதை உட்பட.
மேலுள்ள ஸுசுருத ஸம்ஹிதையில் ஆயுர்வேத மருத்துவம் பயில்வதற்கு முதல் மூன்று வர்ணத்தவருக்கு அருகதை உண்டு என்று எழுதிவிட்டு, போனால் போகட்டும் கணக்கில்
“Such an initiation should be imparted to a student, belonging to one of the three twice-born castes such as, the Brahmana, the Kshatriya, and the Vaishya, and who should be of tender years, born of a good family, possessed of, a desire to learn, strength, energy of action, contentment, character, self-control, a good retentive me mory, intellect, courage, purity of mind and body, and a simple and clear comprehension, command a clear insight into the things studied, and should be found to have been further graced with the necessary qualifications of thin lips, thin teeth and thin tongue, and possessed of a straight nose, large, honest, intelligent eyes, with a benign contour of the mouth, and a contented frame of mind, being pleasant in his speech and dealings, and usually painstaking in his efforts. A man possessed of contrary attributes should not be admitted into the sacred precincts of medicine.”
இதையடுத்து ஆயுர் வேதத்தைக் கற்றுக் கொடுக்கிறவர்களுக்கான உரிமையை ஸுசுருதர் கூறும்போது;
“A Bráhmana preceptor is competent to initiate a student belonging to any of the three twice-born castes. A Kshatriya preceptor can initiate a student of the Kshatriya or the Vaishya caste, while a Vaishya preceptor can initiate a student of his own caste alone. A Shudra student of good character and parentage may be initiated into the mysteries of the Ayurveda by omitting the Mantras enjoined to be recited on such an occasion.”
பிராம்மணராக இருப்பவர், பிராம்மண,சத்ரிய,வைசியர்களுக்கு கற்றுத் தரலாம் எனவும்,சத்திரியனாக இருப்பவன் சத்திரியன்,வைசியனுக்கும் கற்றுத் தரலாம் எனவும்,வைசியனாக இருப்பவன் வைசியனுக்கு மட்டுமே கற்றுத்தரலாம் எனவும் எழுதுகிறார். சூத்திர மாணவனுக்கு ஆயுர்வேதத்தில் உள்ள மந்திரங்களைத் தவிர மற்ற விசயங்களை கற்றுக் கொடுக்கலாம் என்பதையும் கூறுகிறார். இதே கருத்தை உபநிடதம்,மகாபாரதம் முதல் மற்ற எல்லா வைதிக நூல்களும் கூறுகின்றன. பெண்கள் மற்றும் சூத்திரன் வேத மந்திரங்களை ஒருநாளும் கற்றுக் கொள்ளக் கூடாது, ஆனால் அதே வேளையில் பெண்களும், சூத்திரனும் புராணங்களை இதிகாசங்களை கற்றுக் கொள்ளலாம் என்பதே அது.
இதே கருத்தை ஸுசுருத ஸம்ஹிதையும் பிரதிபலிக்கிறது.வழக்கம் போல சண்டாளர்கள்,பஞ்சமர்கள்,பதிதர்கள்,புலையர்கள்,பெண்கள் ஆயுர்வேதம் கற்றுக் கொள்ளத் தகுதியில்லாதவர்கள் என்பதை எழுதிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.
தவிர ஆயுர்வேத மருத்துவ முறை என்பது பூர்வ கர்மா விலிருந்து அதாவது முந்தைய பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கும் சேர்த்துத் தொடங்குவதாக எழுதப்பட்டுள்ளது.
“The entire course of medical treatment in connec tion with a disease may be grouped under three subheads, as the Preliminary measures (Purvą-karma); the Principal therapeutical or surgical appliances (Pradhána-karma); and the After-measures (Paschát karma). These measures will be discussed under the head of each disease as we shall have occasion to deal with them.”
“It is the Karma (dynamics of acts done by a person in a prior existence) which determines the nature of the body it will be clothed with, as well as the nature of the womb it shall be conceived in, in its next incarnation.”
இப்படி பூர்வ கர்ம வாசனை பற்றி பல இடங்களில் இந்த நூலில் குறிப்புகள் உண்டு.
“உலகவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டுபண்ணினார்.”
“அந்தப்பிரம்மாவானவர் தன்னுடைய தேகத்தை இரண்டு கண்டமாக்கி ஒன்று ஸ்த்திரியாகவும் ஒன்றுபுருஷனாகவும் ஆகி அந்த ஸ்த்திரியினிடத்தில் அந்தப்புருஷனாகியதானே புணர்ந்து விராட் புருஷனையுண்டுபண்ணினார்.” (மநு தர்ம சாஸ்திரம் அத்.1:31-32)
என உள்ளதை மேற்கோள் காட்டி ஸுசுருத சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிராஜ் துவார்காந்த் சென் அவர்களது நூலின் அறிமுக உரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;
“Sushruta, in common with the Brahmanic philosophers of Ind.. believed that distinction of sex has evolved from a pri mordial hermaphroditism. Manu in his Institutes has emphasised the fact (2), though in a highly poetic style. He observes that "the Purusha (Logos), by a stroke of Will. divided its body (animated cosmic matter) into two, one of which was male, and the other female."
அறுவைச் சிகிச்சை என்பது ஆரியர்கள் போர்க் காலங்களில் பயன்படுத்தியதை வேதங்களில் உள்ள ஸ்லோகங்களை உதாரணம் காட்டி பின்னாட்களில் பிராம்மணிய சமூகத்தில் அறுவைச் சிகிச்சை பற்றிய ஒவ்வாமை பற்றியும் கவிராஜ் தொட்டுக் காட்டுகிறார்;
“But although the aid of surgery was constantly sought for, surgeons were not often allowed to mix in the Brahmanic society of Vedic India. This is hinted at by our author when he says that it was during the wars be tween the gods and demons that the Ashvins, the surgeons of heaven, did not become entitled to any sacrificial oblation till they had made themselves eligible for it by uniting the head of the god of sacrifice to his decapitated body. The story of the progress of Ayurvedic surgery is long and inter esting, but it must sufffice here to mention that with the return of peace,the small Aryan settlements grew in number and prosperity.”
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, ஆறு தொழில்களைத் தர்ம மாக செய்ய வேண்டிய பிராம்மணர்களுக்கு வரப் பிரசாதமாக இந்த நூல் தக்க சமயத்தில் உதவி செய்தது.அறுவை சிகிச்சை, ரத்தம்,கத்தி இதை தொடுவதையே பாவம் எனக் கருதிய சமூகத்தை ஸுசுருத ஸம்ஹிதை ஆயுர்வேதம் பயில்பதற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முக்கிய அதிகாரிகளாக அதிகாரம் அளிக்கிறது.இந்த நூலை முக்கிய ஆவணமாகவும் தங்களுக்குச் சாதகமாகப் நவீன மருத்துவம் பயில்வதற்கு பிராமணர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதில் ஐயமில்லை.
மற்றபடி மற்ற எல்லா வைதிக நூல்களில் எழுதப்பட்டுள்ளதைப் போல இருபிறப்பாளர்களுக்கு சாதகமாகவே அதிலும் குறிப்பாக பிராம்மணர்களின் நலன் காக்கப்படுவதற்காகவே ஸுசுருத ஸம்ஹிதையும் எழுதப்பட்டுள்ளது என்பதை நான் விளக்காமலேயே வாசிக்கிற உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.மநுதர்ம சாஸ்திர நூல் போன்ற அனைத்து தர்ம சாஸ்திர நூல்களுக்கும் ஸசுருத ஸம்ஹிதையும் நிகரானது என எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இருபிறப்பாளர்களின் நலன்களைப் பாதுகாத்த வைதிக நூல்களைப் போலவே இப்போதுள்ள மதவாத அரசும் செயல்படுவது நாம் அறிந்ததே.
ஸுசுருத ஸம்ஹிதையில் முதல் மூன்று வர்ணத்தவருக்கே ஆயுர்வேதம் பயில்வதற்கு அனுமதி அளித்துள்ளதைப் போல,வசதி இல்லாத கிராமப் பிண்ணனியிலிருந்து வரும் சூத்திர ஆதி திராவிட மாணவ மாணவிகளைத் தவிர்த்து மற்ற வசதியான மூவர்ணத்தவர்களுக்கு அளிக்கும் சலுகை என்பதே  NEET என உணர வேண்டும்.
வைதிக சனாதன தர்மத்தைப் புரிந்து கொள்ளாமல்,இருபிறப்பாளர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வரும் சூத்திரகள்,ஆதி திராவிடர்கள் உள்ளவரை வைதி சனாதனத்தின் ஆதிக்கம் எல்லா வழிகளிலும் எல்லா இடங்களிலும் தொடரும் என்பதே உண்மை.NEET மாதிரியான  வன்மங்கள் தொடரும் என்பதே கசப்பான உண்மை.
துணை நூல்கள்:
1.ஸுசுருத ஸம்ஹிதை-முதற் பகுதி (அறுவைச் சிகிச்சையைப் பற்றிய ஆயுர்வேத நூல்)- தமிழாக்கம் எஸ்.என்.ஶ்ரீ ராமதேசிகன் அவர்கள், வெளியீடு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம்,1991)
இந்த நூலின் சில பக்கங்களை பின்னூட்டம் பகுதியில் இணைத்துள்ளேன்.
2.The Sushruta Samhita- Vol 1, Edited and Published by Kaviraj Kunja lal Bhishagratna,1907
3.மநுதரும சாஸ்திரம்-இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பு, 1865 ஆம் ஆண்டு பதிப்பு
அறியப்படாத இந்துமதம் (முதற் பாகம்) எனும் எனது நூலில் இக்கட்டுரையை இடம்பெறச் செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை: