வெள்ளி, 22 செப்டம்பர், 2023

ஹிஜாப் அணியாத ஈரானிய பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

May be an image of 5 people and text that says 'Daily Ceylon NEWS ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை @dailyceylon ollow the truth'

Rishvin Ismath :  "ஹிஜாப் ஒரு தெரிவு, எங்க பெண்கள் அவங்களா விரும்பித்தான் அணிகின்றார்கள்" என்றெல்லாம் கதை விட்டார்களே, அதையும் உண்மை என்று நம்பிக்கொண்டு ஃபெமினிசம் பேசிக்கொண்டு இருந்தார்களே, அவர்கள் எல்லாம் எங்க போனார்களோ....
இதுவும் பெண்களே விரும்பி அவங்களா வச்சுகிட்ட சட்டம்தான்னு உருட்டுவாங்களோ?

டெய்லி நியூஸ் :ஈரான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆடை தொடர்பான சட்டங்களை மீறும் ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராதம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சட்டமாக இயற்றப்பட்டால், ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண்களின் ஆடை தொடர்பான சட்டங்களை மீறி ஆடை அணிந்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் மீது மூன்றாண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ஈரான் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் சட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் ஈரானின் அறங்காவலர் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: