புதன், 20 செப்டம்பர், 2023

யாழ்ப்பாண மலையாள புகையிலை சங்கம்.. 1952

May be an image of 1 person
யாழ்ப்பாண புகையிலை தோட்டம்

ராதா மனோகர் : யாழ்ப்பாண மலையாள புகையிலை சங்கம் தொடர்பான இரு செய்திகளை இங்கே பதிவிட்டுள்ளேன்~
 1952 இல் திரு  டட்லி சேனநாயக்காவின் அரசில்  அரசில் தபால் தகவல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்  திரு நடேசபிள்ளை (சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகன்)
இவர் அமைச்சராக பணிபுரிந்த காலக்கட்டத்தில் உதவி அமைச்சர் குமாரசாமியோடு புது டெல்லிக்கு ஒரு முக்கிய வர்த்தக உடன்படிக்கைக்காக சென்றிருந்தார்  
அதுவரை யாழ்ப்பாண புகையிலை வர்த்தகம்  இந்தியாவுக்கும் அங்கிருந்து பல நாடுகளுக்குக்கும் தாராளமாக நடந்து கொண்டிருந்தது  
இந்த நடைமுறைக்கு மாறாக புதிய இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது  
இக்கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் மலையாள புகையிலை சங்கம் இரு அரசுகளையும் வேண்டி கொண்டிருந்தது
இந்நிலையில் இது பற்றி நேரடியாக இந்திய அரசோடு பேசுவதற்கு டட்லி அரசின் சார்பாக இவர்கள் இந்தியாவுக்கு சென்றனர்
அங்கு இவர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது
எங்களை மகாராஜாக்கள் போல நடத்தினார்கள்  ராஷ்ட்ரபதி பவனில் எங்களுக்கு விருந்துபசாரங்கள் செய்து எங்களை பிரபுக்கள் போல நடத்தினார்கள்


 குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் மத்திய அமைச்சர்களும் எங்களோடு மிகவும் அன்போடு நடந்து கொண்டார்கள்
இவையெல்லாம் அவர்களே ரத்மலானை விமான நிலையத்தில் பேட்டியில் கூறியது
புகையிலை போக்குவரத்து தடையும் தற்காலிகமாக நீக்கப்பட்டது
யாழ்ப்பாண புகையிலைக்கும் இலங்கை தமிழர் அரசியல் கலை கலாச்சாரம் சமூகவியல் எல்லாவற்றிற்கும் மிகுந்த தொடர்பு உளள்து என்பதை சற்று கோடி காட்டவே இச்சம்பவத்தை கொஞ்சம் விரிவாக கூறியுள்ளேன்

யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை 28 - 03- 1961
மலையாள புகையிலை ஒப்பந்தம்  வர்த்தக மந்திரி மறுப்பு  
யாழ்ப்பாணம் . செவ்வாய்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட மலையாள புகையிலை ஒப்பந்தம் வருகிற ஜூலை 31 திகதியுடன்  முடிகிறது
இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மலையாள புகையிலை சங்கத்தார் சென்ற நவம்பரில் இலங்கை வர்த்தக மந்திரியிடம் கேட்டிருந்தனர் இலங்கை அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்த முன்வரப்போவதில்லை என்று மந்திரி அனுப்பிய பதிலில் இருந்து தெரிகிறது
இந்த செய்தியின் பின்னணியில் சில தகவல்கள்
யாழ்ப்பாண மலையாள புகையிலை சங்கம்  என்பது  புகையிலை உற்பத்தியையும் வியாபாரத்தையும்  பேணி வந்த ஒரு கூட்டுறவு அமைப்பாகும்
யாழ்ப்பாண புகையிலை வர்த்தகம் அன்று ஆட்சியாளரின்  கண்ணை உறுத்திய விடயமாகும்
வடபகுதியின்  அன்றைய பொருளாதார மேலாண்மைக்கு இந்த புகையிலை வர்த்தகம் பெரிய காரணியாக இருந்திருக்கிறது.

 May be an image of 1 person

No photo description available.

கருத்துகள் இல்லை: