திங்கள், 18 செப்டம்பர், 2023

சீமான் வழக்கு போடட்டும்- ஆவணங்களுடன் நிரூபிக்கிறேன்: விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோவால் மீண்டும் பரபரப்பு


மாலை மலர் : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்தார்.
சீமானை கைது செய்ய வைக்காமல் இங்கிருந்து செல்ல மாட்மேன் என்று சவால்கள் விட்டெறிந்தார்.
சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, செய்தியளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்தார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.

இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார். இருந்தாலும் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து இன்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜரானார்.

இதுதொடர்பாக பேசிய விஜயலட்சுமி, "தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்" எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூருக்கு சென்ற நடிகை விஜயலட்சுமி, " சாட்டை முருகன் தான் ரூ.50 ஆயிரம் வழங்கி தன்னை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார் என்று பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், " சாட்டை துரைமுருகன் ஏற்பாடு செய்த வழக்கறிஞரை கொண்டுதான் புகாரை வாபஸ் பெற்றேன். சீமான் நீங்கள் மான நஷ்ட ஈடு வழக்கு போடுங்கள். நான் அனைத்து ஆதாரங்களையும் கொண்டு வந்து நிரூபிக்கிறேன்" என்றார்.
 

கருத்துகள் இல்லை: