மாலைமலர் : சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இந்த வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும். விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசுக்கு வழங்கவேண்டும் என்று சீமான் தரப்புக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக