வெள்ளி, 22 செப்டம்பர், 2023

கனடிய இந்திய அரசுகளோடு தொடர்பில் உள்ளோம்! அமெரிக்க அறிவிப்பு

மாலை மலர் : வாஷிங்டன்:இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சாட்டியது.
தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் கனடா அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
மேலும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை நான் உறுதியாக நிராகரிக்கிறேன்.

குற்றச்சாட்டுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: