திங்கள், 20 ஜூன், 2022

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பா?-போலீசார் விசாரணை!

நக்கீரன் செய்திப்பிரிவு   :  திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த சாய்தருண் என்ற 2 வயது குழந்தைக்கு சிலநாட்களுக்கு முன்பு உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையளித்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்தருணுக்கு அவரது தாய் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் அடுத்தநாள் காலையிலும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த நூடுல்சை தாய் குழந்தைக்கு சாப்பிட கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில்,


மாலை நேரத்தில் மிகவும் சோர்வாக காணப்பட்ட குழந்தை வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு துரித உணவான நூடுல்சை கொடுத்ததால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு குழந்தை இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: