செவ்வாய், 21 ஜூன், 2022

அதிபர் கோத்தபாயவின் அதிகாரங்கள் குறைப்பு நாடாளுமன்றத்திற்கே அதிக அதிகாரம்! 21 வது சட்டத்திருத்தம் நிறைவேறியது

tamil.samayam.com  : இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைக்க வகை செய்யும் அரசியலைப்பின் 21 ஆவது சட்டத்திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
இந்த நிலையில், இலங்கை தற்போது சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக மகிந்த ராஜபக்சே தமது பிரதமர் பதவியை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதனையடுத்து ரணில் விக்ரமசிங்கே நாட்டின் புதிய பிரதமராக கடந்த மாதம் பதவியேற்றார்.   
அப்போது, இலங்கை அதிபருக்கு உள்ள மட்டற்ற அதிகாரத்தை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும்படி அரசியல் சாசனத்தின் 21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 21 ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ள இலங்கை அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை: