செவ்வாய், 21 ஜூன், 2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா

tamilmurasu.com.sg : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. படம்: இந்திய ஊடகம்
தூத்­துக்­குடி: தூத்­துக்­கு­டி­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக மூடப்­பட்­டி­ருக்­கும் ஸ்டெர்­லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறு­வ­னம் முடிவு செய்து உள்­ளது.
தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக கடந்த 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. அதே ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் முன்பு முற்­றுகை போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டது.
இந்­தப் போராட்­டத்­தில் ஏரா­ள­மா­னோர் பங்­கேற்­ற­னர். அப்­போது ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மாக காவல்­து­றை­யி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் இந்­தியா முழு­வ­தும் பெரும் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து தமி­ழக அரசு அர­சாணை பிறப்­பித்த தால் 2018 மே மாதம் 28ஆம் தேதி­யி­லி­ருந்து ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்­லைட் நிறு­வ­னம் சார்­பில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதனை விசா­ரித்த நீதி­ப­தி­கள், ஸ்டெர்­லைட் ஆலையை மூட தமி­ழக அரசு விதித்த தடை தொட­ரும் என்று தெரி­வித்­த­னர். ஸ்டெர்­லைட் நிர்­வா­கம் தரப்­பில் தாக்­கல் செய்த மனுவை தள்­ளு­படி செய்­ய­வும் நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர். சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் இந்த உத்­த­ரவை எதிர்த்து வேதாந்தா நிறு­வ­னம் உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­தது.

இதை­ய­டுத்து கடந்த நவம்­பர் மாதம், வேதாந்தா நிறு­வ­னம் தரப்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட இடைக்­கால மனு­வில் ஆலை­யில் உள்ள இயந்­திர உப­க­ர­ணங்­கள் துருப்­பி­டித்து சேத­மா­கும் நிலை­யில் உள்­ள­தால் ஆலை பரா­ம­ரிப்பு பணி­களை மேற்­கொள்ள அனு­ம­திக்க வேண்­டும் என கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த தமி­ழக அரசு, வேதாந்தா நிறு­வ­னத்­தின் மனுவை அப­ரா­தத்­து­டன் தள்­ளு­படி செய்ய கேட்­டுக்
 கொண்­டது.

இதை­ய­டுத்து வேதாந்தா நிறு­வ­னத்­தின் கோரிக்­கையை உச்ச நீதி­மன்­றம் நிரா­க­ரித்து உத்­த­ர­விட்­டது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் ஸ்டெர்­லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறு­வ­னம் முடிவு செய்­துள்­ளது. ஸ்டெர்­லைட் ஆலையை வாங்க விரும்­பு­வோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்­குள் விண்­ணப்­பிக்க வேண்­டும் என்று அந்­நி­று­வ­னம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: