வெள்ளி, 22 ஏப்ரல், 2022

ரஷ்ய அதிபர் புட்டின்: மரியபோல் நகரைக் கைப்பற்றிவிட்டோம்

 tamilmurasu  : உக்­ரே­னின் தென்­து­றை­முக நக­ரான மரி­ய­போலை தமது படை­கள் கைப்­பற்­றி­விட்­ட­தாக ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் நேற்று அறி­வித்­தார்.
மரி­ய­போல் நக­ரி­லுள்ள மிகப் பெரிய அஸவ்ஸ்­தால் எஃகு ஆலை தவிர்த்து, அந்­ந­க­ரின் மற்ற அனைத்­துப் பகு­தி­களும் ரஷ்­யப் படை­களின் கட்­டுப்­பாட்­டிற்­குள் வந்­து­விட்­ட­தாக அந்­நாட்­டின் தற்­காப்பு அமைச்­சர் செர்கே ஷோய்கு தெரி­வித்­தார்.
“மரி­ய­போல் போன்ற தென்­ப­கு­தி­யி­லுள்ள முக்­கி­ய­மான மையத்­தைக் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­தி­ருப்­பது ரஷ்­யப் படை­க­ளுக்­குக் கிடைத்­துள்ள வெற்றி,” என்று ஷோய்­கு­வு­டன் சேர்ந்து தொலைக்­காட்­சி­வழி உரை­யாற்­றி­ய­போது திரு புட்­டின் குறிப்­பிட்­டார்.


கிட்­டத்­தட்ட தனது இரண்டு மாத­கா­லப் படை­யெ­டுப்­பில் ரஷ்யா கைப்­பற்­றி­யுள்ள ஆகப் பெரிய உக்­ரே­னிய நக­ரம் மரி­ய­போல் எனக் கூறப்­ப­டு­கிறது. டோன்­பாஸ் வட்­டா­ரத்­தில் ரஷ்யா தனது கட்­டுப்­பாட்டை உறு­திப்­ப­டுத்த இந்த வெற்றி முக்­கி­ய­மா­ன­தா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

“மரி­ய­போல் விடு­விக்­கப்­பட்­டு­விட்­டது. எஞ்­சிய உக்­ரே­னி­யப் படை­கள் அஸோவ்ஸ்­தால் ஆலைப் பகு­தி­யில் தஞ்­சம் புகுந்­துள்­ளன,” என்று திரு ஷோய்கு கூறி­னார்.

முன்­ன­தாக, ஈரா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட உக்­ரே­னி­யப் படை­யி­னர் இருப்பதாகக் கூறப்படும் எஃகு ஆலைப் பகுதிக்குள் ரஷ்­யப் படை­யி­னர் அதி­ர­டி­யா­கப் புகு­வது தேவை­யற்­றது என்று திரு புட்­டின் கூறி­விட்­டார். ஆனாலும், ஓர் ஈ கூட அங்கிருந்து தப்பிக்க முடியாதபடி அப்பகுதியை அடைத்துவிடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மரி­ய­போல் நக­ரில் இருந்து நான்கு பேருந்­து­கள் மக்­களை ஏற்­றிக்­கொண்டு வெளி­யே­றி­விட்­ட­தாக உக்­ரே­னிய துணைப் பிர­த­மர் ஐரினா வெரெஸ்­சுக் நேற்று தெரி­வித்­தார். அங்­கி­ருந்து பெண்­கள், குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் ஆகி­யோரை வெளி­யேற்­றும் பணி தொட­ரும் என்­றும் அவர் கூறினார்.

கியவ் வட்டாரத்திலுள்ள பிண அறைகளில் 1,020 அப்பாவிகளின் உடல்கள் இருப்பதாக உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அணு­வா­யுத ஏவு­க­ணைச் சோதனை

இதற்­கி­டையே, கண்­டம்­விட்­டுக் கண்­டம் பாய்ந்து, அணு­வா­யு­தத்­தைச் சுமந்து சென்று தாக்­க­வல்ல ஏவு­க­ணையை ரஷ்யா சோதித்­துப் பார்த்­துள்­ளது.

இதனை ‘உல­கி­லேயே ஆகச் சிறந்­தது’ என்று ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் மார்­தட்­டி­னார்.

“இந்­தத் தனிச்­சி­றப்­பு­மிக்க ஆயு­தம் நமது படை­க­ளின் போர்த்­திறத்தை வலுப்­ப­டுத்­தும்; புற அச்­சு­றுத்­தல்­களில் இருந்து ரஷ்­யா­வின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தும்; ஆக்­ரோ­ஷ­மா­கப் பேசி நம்மை அச்­சுறுத்த முய­லும் எதி­ரி­களை இரு­முறை யோசிக்க வைக்­கும்,” என்று தொலைக்­காட்சி வழி உரை­யாற்­றி­ய­போது அதி­பர் புட்­டின் குறிப்­பிட்­டார்.

இந்­தப் புதிய ‘சர்­மாத்’ ஏவு­கணை­யில் பத்து அல்­லது அதற்­கும் மேற்­பட்ட ஆயு­தங்­களை ரஷ்யா பொருத்­தக்கூடும் என எதிர்­பார்க்­கப்­படு­வ­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது.

பல ஆண்­டு­க­ளாக இந்த ஏவு­கணையை உரு­வாக்­கும் முயற்­சியை ரஷ்யா மேற்­கொண்டு வந்­த­தால் மேற்­கத்­திய நாடு­க­ளுக்கு இச்­சோ­தனை வியப்­ப­ளிக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது. ஆனா­லும், இப்­போ­தைய போர்ச் சூழ­லில் இந்த ஏவு­க­ணைச் சோதனை இடம்­பெற்றது முக்­கி­ய­மா­கப் பார்க்­கப்­படு­கிறது.

கருத்துகள் இல்லை: