ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

காங்கிரஸ் 400க்கு குறி?.. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த சோனியாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

 Noorul Ahamed Jahaber Ali  --  tamil.oneindia.com  : டெல்லி: மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் வலு குறைவான மாநிலங்களில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு 370 -400 தொகுதி
2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து அக்கட்சிக்குள் இருந்த உட்கட்சிப்பூசல் வெட்டவெளிச்சமானது.
தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலக, சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பதவியேற்றார்.
2 ஆண்டுகளாகியும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்காமல் அக்கட்சி உள்ளது.
 5 மாநில தேர்தல் படுதோல்வி 5 மாநில தேர்தல் படுதோல்வி இந்த நிலையில் நடந்த முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.


அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும், காந்தி குடும்பத்தை சாராதவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன.

இதனை தொடர்ந்து தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸை மீட்க அதிருப்தி தலைவர்களுடனும் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். செயற்குழு கூட்டத்திலும் பல்வேறு கருத்துக்களை அக்கட்சியினர் தெரிவித்தனர். அவர்களில் பலர் எதிர்வரும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைக்க வேண்டும் என பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்த ஐ-பேக் தலைவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள சோனியா காந்தி வீட்டுக்கு பிரசாந்த் கிஷோர் சென்றுள்ளனர். ஆனால், அதற்கு பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 ள் பங்கேற்பு மூத்த தலைவர்கள் பங்கேற்பு சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய் சிங், அம்பிகா சோனி, அஜய் மக்கான், கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து முடிவெடுக்கப்பட்டு அது கைவிடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

என்ன சொன்னார் பிரசாந்த் கிஷோர்?
பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நடத்திய இந்த சந்திப்பில், முழுக்க முழுக்க 2024 மக்களவைத் தேர்தல் குறித்து பேசிதாக கூறப்படுகிறது. 4 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அதில் பாஜகவை வீழ்த்த என்னென்ன வியூகங்களை கையாளலாம் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ளார். குறிப்பாக 370 - 400 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் வலுவாக இல்லாத மாநிலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்

கருத்துகள் இல்லை: