வியாழன், 21 ஏப்ரல், 2022

இசைஞானியை இந்திய ஜனாதிபதியாக்க வேண்டும். .. பழம்பெரும் பத்திரிகையாளர் எல் ஆர் ஜெகதீசன்

 LR Jagadheesan:  அம்பேட்கர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டில் உருவான நவதலித்திய அரசியல் என்பது அரசு ஊழியர் நலன்கள்; NGOக்களின் தேவைகள்;
கிறிஸ்தவ மிஷினரிகளின் வழிகாட்டுதல்கள்,
மற்றும் RSS அரவணைப்பு மற்றும் ஊக்குவிப்புகள்,
என்கிற பல்வேறு காரணிகளால் வளர்ந்து வலுப்பெற்று இன்று ஒற்றைஜாதிச்சங்க அணிதிரட்டலாய் வந்து முடிந்திருக்கிறது ,
என்கிற கசப்பான உண்மையை இளம் தலைமுறைக்கு முகத்தில் அறைந்து புரியவைத்த பொதுசேவைக்காகவே,
 இசைஞானியை இந்திய ஜனாதிபதியாக்க வேண்டும்.
அந்த பதவிக்கான எல்லா தகுதிகளும் அவருக்குண்டு. அவர் அங்கே அமரவேண்டும் என்பதை நான் முழுமனதோடு கோருகிறேன். ஆதரிக்கிறேன்.
காலமறிந்து இளையராஜா செய்திருக்கும் இந்த மாபெரும் பொதுச்சேவையில் சந்தேகமிருப்பவர்கள் முகநூலில் வேகமாய் இயங்கும்,
 நவதலித்திய அயோத்திதாசரிய மற்றும் அம்பேட்காரிய போராளிகளின் Facebook, Twitter Timelineகளை கொஞ்சம் போய் ஒரு எட்டு பார்க்கவும்.
சிலரைத்தவிர பலரது timelineஇல் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான சுவடே இருக்காது.
அல்லது இளையராஜா மீதான “ஜாதிய வன்ம தாக்குதல்களை”(??) கண்டித்திருப்பார்கள்.
அடுத்தபடியாக பாக்கியராஜுக்கு கண்டனம் வெளிப்படும்.
இது தான் இவர்கள். “அவாள்”களின் அடிச்சுவட்டில் “இவாள்”களுக்கும் அவரவர் ஜாதி மட்டுமே ஒற்றை அளவுகோள்.
அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் பொது சமூக செயற்பாட்டுக்கும். மற்ற எதுவுமே ஒரு பொருட்டே அல்ல.
இசைஞானியே என்றும் உம் புகழ் நிலைத்திருப்பதாகுக.

கருத்துகள் இல்லை: