செவ்வாய், 4 அக்டோபர், 2022

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பிறந்த தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது Zhagaram Editor

May be an image of 1 person and standing

zhagaram.tv :  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பிறந்த ஈழத் தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த திருமதி.நளினி தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடந்த 12.08.2022 அன்று அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது பாஸ்போர்ட் அதிகாரிகள் அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கியுள்ளார்கள். மறுவாழ்வு முகாமில் பிறந்த இலங்கை தமிழருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது இதுவே முதன்முறை. இது தொடர்பான ஊடக அறிக்கையில்:


திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த திருமதி.நளினி என்பவர் தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது

திருமதி.நளினியின் பெற்றோர் இலங்கையிலிருந்து இனக்கலவரத்தின் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள். நளினி இந்தியாவில் மண்டபம் பகுதியில் 1986-ம் ஆண்டு பிறந்தார்.இந்திய குடிஉரிமை சட்டம்,1955-ன் படி 26/01/1950லிருந்து 01.07.1987 வரை இந்திய மண்ணில் பிறந்த அனைவரும் இந்திய குடியுரிமை உள்ளவராவர்.மேற்படி சட்ட பிரிவுகளை சுட்டி காட்டிய மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்,மனுதாரர் நளினி இலங்கையை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள் தான் என தீர்ப்பளித்து அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலுசேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: