புதன், 12 ஜனவரி, 2022

திமுக ஆதரவாளர்களிடையே நீயா நானா? பெரியாரா? அம்பேத்கரா? .. ஏனிந்த போட்டி?

அம்பேத்கர் பார்வையில் 'பெரியார் ஒரு குழப்பவாதி'! 'எல்லையோடு நின்று கொள்'  என்பதே பெரியாரியம்! - Velsmedia

Vijayabaskar S  :  காலங்காலமாக பெரியாரும் அம்பேத்கரும் இணைந்து செயல்பட்டடவர்கள். அன்றைய நீதிகட்சி, திராவிடர் கழகம், திமுக தொடங்கி,  இன்றைய திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட மற்ற திராவிடர் இயக்கங்கள் அனைத்தும் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக பார்க்கின்றன.
அம்பேத்கர் எழுதியதை பெரியார் எழுதியது எனவும்,
பெரியார் எழுதியதை அம்பேத்கர்  எழுதியது எனவும் மாற்றினாலும் இரண்டும் ஒன்றுபோல் இருக்குமளவுக்கு கருத்தொற்றுமை உள்ளவர்கள் அவர்கள்.
தலித் மக்கள் அண்ணல் அம்பேத்கரை ஒப்பற்ற தலைவராக, கடவுளுக்கு இணையாக அல்லது மேம்பட்டவராக அன்றும் இன்றும் கருதுகிறார்கள்.
 அண்ணல் அம்பேத்கரை சேர்த்துக்கொண்டால் தங்களுக்கு ஓட்டுக்கிடைக்கும் என அம்பேத்கரின் நேர் எதிர் கொள்கை கொண்ட பாஜக அம்பேத்கரை போற்றுவது போல் நடிக்கிறார்கள்.
உண்மை இவ்வாறு இருக்க, பெரியார், அண்ணா, கலைஞர், திராவிடம் என்ற அடையாளங்களை முன்னிறுத்தி செயல்படுவதாக தன்னை அடையாளப்படுத்தும் ஒருவர் அம்பேத்கரை திராவிட இயக்கத்திலிருந்து விலக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து எழுதுவதற்கு என்ன நோக்கம் இருக்கும்?
அப்படிப்பட்ட நபரின் கருத்தை பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள், திராவிட இயக்கத்தினர் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் ஆதரிப்பதின் தேவை என்ன?

 

 Aathavan Aathavan  : ஒரே குருட்டு உருட்டு ...திமுக எதிர் கொதிநிலை... அவ்வளவே

Karpagavinayagam Subbiah : பெரியார் தனது வாழ்நாளில் நடத்திய பெரிய போராட்டங்கள் 3. 1. வைக்கம் 2. இந்தி எதிர்ப்பு 1938 3. அரசியல் சட்ட எரிப்பு 1957 ... இம்மூன்று போராட்டங்களில் எவற்றில் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்கள்?

மகிழ்நன் பா.ம : மகத் குள போராட்டத்திற்கு வைக்கம்தான் Inspiration என்று அம்பேத்கர் எழுதியிருக்கிறார்
அரசியல் சாசன அவையிலேயே, சமூக ஜனநாயகப்படவில்லையானால், ஒடுக்கப்படுகிற மக்களே இதை தூக்கி எறிவார்கள் என்றார் அம்பேத்கர்

Karpagavinayagam Subbiah : மகிழ்நன் பா.ம இந்தி எதிர்ப்பு?

மகிழ்நன் பா.ம : ஓ பத்தலையா?
அப்படின்னா நீங்க பதிலை எதிர்பார்க்கல....

மகிழ்நன் பா.ம  : இந்தி எதிர்ப்பு தொடர்பாக நீங்களே கூறி விடுங்கள்

Karpagavinayagam Subbiah :  மகிழ்நன் பா.ம இருவரின் ஆளுமையும் செயல்களமும் வெவ்வேறு. சில இடங்களில் ஒன்றுபடுகின்றனர். சில இடங்களில் எதிர் எதிர் நிலையில் உள்ளனர்.. இவர் நினைப்பதை அவர் எழுதினார் என்று சொல்வதெல்லாம் மலினப்படுத்தல்

Vijayabaskar S : அம்பேத்கரைப் பற்றி, அம்பேத்கர் வெறுப்பாளர்களும், பெரியாரைப் பற்றி பெரியார் வெறுப்பாளர்களும் அவதூறுகளை அள்ளி வீசும் போது, கம்யூனிஸ்டு எனச் சொல்லிக் கொள்ளும் நீங்கள் சேர்ந்து கொள்வதில் உள்நோக்கம் ஏதும் உண்டா? உண்டுன்னு சொல்ல நான் விரும்பவில்லை. இன்றைய சூழலில் அம்பேத்கரை விமர்சிக்க வேண்டியதின் தேவை தான் என்ன?

Karpagavinayagam Subbiah :  இதில் அம்பேத்கர் மீது விமர்சன்ம் எங்கே இருக்கு? உங்க மீதுதான் விமர்சனமே...வரலாற்றில் இரு வேறு வேறு ஆளுமைகளை அவர் நினைத்ததை இவர் செய்தார் என சொல்வது மலினப்ப்டுத்தல் என்பதுதான் இங்கே உள்ள விம்ர்சனம். அம்பேத்கரையோ பெரியாரையோ விமர்சனம் செய்யக்கூடாது என்பதுதான் உங்க நிலையா? அம்பேத்கர், இந்தச்சூழ்நிலையை எதிர்கொள்ள எந்த விதத்தில் உதவிக்கு வருகிறார்? இதற்கெல்லாம் விடை தரவும்

வேந்தன். இல :  பெரியாரின் தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை உங்களுக்குள்ள கம்யூனிச புரிதலில் நீங்கள் ஏற்கிறீர்களா? இருவருக்கும் சில இடங்களில் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஆனால் அதற்காக இருவரின் கருத்தியலும் முரணானது என பேசுவது அரசியல் அறியாமை.

Karpagavinayagam Subbiah : வேந்தன். இல இங்கே விசயம் நான் ஏற்பது பற்றியல்ல.. சமஸ்கிருதம், தனிநாடு, பாகிஸ்தான், மத மாற்றம், ஒன்றுபட்ட இந்தியா, இந்தி ஆட்சி மொழி, சோவியத் ஒன்றியம் குறித்த பார்வை, கம்யூனிசம்,ஆரிய படையெடுப்பு பற்றிய கொள்கை, மாநிலங்களுக்கு அதிகாரம், சாதியின் தோற்றம் இவை எல்லாவற்றிலும் இருவரும் வெவ்வேறு கருத்து கொண்டவர்கள்.. அதைத்தான் நான் சொல்ல வருவது. இரு தனித்தனி ஆளுமைக்ளை புரிந்துகொள்ளாமல் இரண்டு பேரும் ஒன்னு என சொல்வது அபத்தம்


Kolanji Narayanan :  ஓ.. இவர் கம்யூனிஸ்ட்டா...!

Ansar Ali  : அண்ணல் அம்பேத்கர் எல்லோருக்குமானவர் என்ற நிலையிலிருந்து தலித்களுக்கு மட்டுமே உரியவர் என்கின்ற உருட்டு யாரிடமிருந்து வருகின்றதோ அவர்கள்தான் தந்தை பெரியாரை பட்டியலினத்தவர்களுக்கான தலைவரில்லை என்கின்ற எண்ணவோட்டத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்ச்சிக்கின்றார்கள்.

Narayanaperumal Jayaraman : அம்பேத்கரையும், அவரின் ஆதரவாளர்களையும் ஒரு சேர ஒரு நாளில் பார்பனீயம் விழுங்கி பெரியாரியத்திற்கும் திராவிடத்திற்கும் எதிராக திருப்பிவிடும் வாய்ப்பு இருக்கிறது தோழர்...அதனால் தமிழ்நாடு அரசியல் பெரியார் வழியில் செல்வது தான் சரி. அண்ணலை இங்கு யாரும் குறைத்து மதிப்பிடவில்லை....

Sundaram Kannan  : ஆம்.. சமஸ்கிருத மொழி குறித்து அம்பேத்கர் கொண்ட கருத்தை பெரியார் பெயரில் அப்படியே மாற்றி போடலாமே...


Sakia Prem : அப்படி எழுதியவர் யார்??தோழர்..

Vijayakumar R  ·பெரியார் பொருள்முதல்வாதி
அம்பேத்கார்
கருத்துமுதல்வாதி
பெரியார்
கடவுள் மத மறுப்பாளர்
அம்பேத்கார்
மதவாதி
பெரியார் தனித்தமிழ்நாடு ஆதரவாளர்
அம்பேத்கார்
இந்திய காலனிய வெறியர்
இந்தி சமஸ்கிருத வெறி பிடித்தவர்
பெரியார் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்
அம்பேத்கார் கம்யூனிச விரோதி
வர்க்கப் போராட்ட விரோதி
பெரியார் முதலாளித்துவ இடது முற்போக்காளர்
அம்பேத்கார் முதலாளித்துவ வலது பிற்போக்காளர் 

கருத்துகள் இல்லை: