புதன், 12 ஜனவரி, 2022

உத்திரபிரதேசம் - தேசத்தின் படுகுழி? மும்முனை நான்முனை போட்டிகளால்.. :

 Satva T :  உத்திரபிரதேசம் - தேசத்தின் படுகுழி:
உத்திரபிரதேசம் எனும் ஒரே மாநிலத்தில் 80 நாடாளமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 80 ல் 2014 ஒன்றிய தேர்தலில் 71/80 என்று பி.ஜே.பி வென்றது. அதேபோல 2019 ல் 61/80 என்று வென்றது. அதுமட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு பி.ஜே.பி மாநில ஆட்சி நடத்தி வருகின்றது.
இவ்வாறு ஒரே மாநிலத்தில் கணிசமான வெற்றியை பெறுவதால் ஒன்றியத்தில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 ல் கணிசமான இடங்கள் அவர்களுக்கு ஒரே மாநிலத்தில் கிடைத்து விடுகிறது.
இவ்வாறு பி.ஜே.பி அங்கு தொடர்ந்து பாரிய வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் உள்ளது. அது உத்திரபிரதேசத்தில் எப்போதும் மும்முனை போட்டி அல்லது நான்கு முனை போட்டி இருக்கின்றது என்பதாகும்.
எடுத்துக்காட்டாக 2017 மாநில தேர்தலில் பி.ஜே.பி 39.6%, சமாஜ்வாதி+காங்கிரஸ் 21.8%, பகுஜன் சமாஜ் 22.2%, என்று வாக்குகள் பெற்றனர்.


கடந்த நாடாளமன்ற தேர்தல் 2019ல் பி.ஜே.பி 49.9%, சாமஜ்வாதி 19.4%, பகுஜன் 18.1%, காங்கிரஸ் 6.3% என்று வாக்குகள் பெற்றனர். (SP+BSP கூட்டணி).
சூழல் இப்படி இருக்க இப்போது அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான்கு கட்சிகளும் தனித்தனியாக மீண்டும் தேர்தலை சந்திக்கின்றனர். அடுத்த நாடாளமன்ற தேர்தலிலும் இவ்வாறே நான்கு முனையில் தேர்தலை சந்திப்பார்கள் என்றும் நம்படுகிறது.
இவ்வாறு எந்தவொரு தர்க்கமும் இன்றி கூட்டணி ஏதும் அமைக்காமல் ஓட்டுகளை பிரித்து தொடர்ந்து பி.ஜே.பி வெற்றி பெற அங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் உதவி வருகின்றனர். குறிப்பாக பகுஜன் சமாஜ் கூட்டணி அமைப்பதில்லை என்பதை கொள்கை பிரகடனமாக செய்துள்ளது வேதனையானதாகும்.
இதே சூழல் தொடர்ந்தால் அடுத்த நாடாளமன்ற தேர்தலிலும் உத்திர பிரதேசம் எனும் ஒரே மாநிலத்தில் 70+ எம்.பிக்களை பெற்று மீண்டும் பி.ஜே.பி ஆட்சியை கைப்பற்றும் ஆபத்து உள்ளது.
P. S: தமிழ்நாட்டில் தனித்து கோட்டையை பிடிப்போம், ஆட்சி அதிகாரத்தை கூட்டணி இல்லாமல் பெறுவோம், அதை அடைவோம். என்றெல்லாம் பிரச்சாரம் செய்யும் பலரிடமும் நாம் கவனமாக இருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: