புதன், 12 ஜனவரி, 2022

அமைச்சர்கள் துறைகள் மாற்றம்: புதிய துறை!

அமைச்சர்கள் துறைகள் மாற்றம்: புதிய துறை!

மின்னம்பலம் : தமிழகத்தில் 3 அமைச்சர்களின் ஒருசில துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பைத் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கும்,
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும்
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானிடம் இருந்த ஓஎம்சிஎல் எனப்படும் அயலக பணியாளர் கழகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வசமும் மாற்றப்பட்டுள்ளது.
அதுபோன்று, புதிதாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இத்துறையின் கீழ் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவை கொண்டு வரப்படவுள்ளது. இத்துறையை தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  -பிரியா

கருத்துகள் இல்லை: