வியாழன், 3 ஜூன், 2021

தீப்பற்றி எரியும் ஓலை குடிசைகள் .. குடிசை மாற்றுவாரியம் கண்ட கலைஞர்

 செல்லபுரம் வள்ளியம்மை : இது நம்ம ஆளு படத்தில் ஓலைக்குடிசைகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தோடுதான் அந்த படமே ஆரம்பமாகும்.  
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் அகோர வெயிலில் ஓலை குடிசைகள் அடிக்கடி எரிந்து சாம்பலாவதை இப்படம் நினைவுக்கு கொண்டுவந்தது  
அந்த கீற்று குடிசைகளில் மக்கள் எரிந்து போவதுவும் கூட அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்
இந்த நிலையில்தான் கலைஞரின் குடிசை மாற்றுவாரியம் செயல் படத்தொடங்கியது.
இந்த திட்டத்தை கலைஞர் அறிவித்த போது இது எப்படி சாத்தியமாகும்?
அன்றிருந்த ஓலைக் குடிசைகள்  தேசத்தில்  அடுக்குமாடி கட்டிடங்கள் என்பது சாதாரண மக்களால் நினைத்து கூட பார்க்கமுடியாத ஒரு பெரும் கனவாகும்.
அதிசயம் ஆனால் உண்மை !
கட்டிடங்கள் எழுந்தன ! ஓலைக்குடில்களில் வசித்தவர்கள் அடுக்கு மாடிக்கு குடிபெயர்ந்தார்கள்!
மழைக்கும் புயலுக்கு வெய்யலுக்கும் மின்னலுக்கும் பயந்து தினம் தினம் செத்து பிழைத்த சென்னை ஓலை குடிசை வாசிகள் மாடிவீட்டு மனிதர்கள் ஆனார்கள்


அந்த காலக்கட்டத்தில் உலகில் எந்த நாட்டில் இது போன்ற ஏழைமக்களுக்கு அரசே மாடிவீடுகள் கட்டி குடியமர்த்தின?
இந்த ஓலைக்குடிகளில் இருந்து மாடி குடியிருப்புகளுக்கு சென்ற மக்களை பற்றி அண்மையில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு போராளி . அதுவும் பெண்ணுரிமை போராளி குறிப்பிட்டிருந்தார்,
புலம் பெயர்த்தப்பட்ட மக்கள் என்பதாக  
இதைத்தான் முன்பு ரஞ்சித்,
மக்கள் பாரம்பரியமாக வாழுமிடங்களில் இருந்து துரத்தப்பட்டார்கள் என்ற ரீதியில் மேடையில் பொழிந்தார்
பற்றி எரியும் ஓலைக்குடிசைகளை பற்றி இவர்களுக்கு தெரிந்திருக்காது  ஒருவேளை இவர்கள் பிறந்து இருக்கமாட்டார்கள்  படித்து தெரிந்திருக்கலாம்  
தெரியாமல் அல்லது தெரிந்தும்ம்
நேர்மை அற்று ஏன்தான் புலம் பெயர்த்தப்பட்ட மக்கள் என்று கூறுகிறார்களோ?        #HBDKalaignar97

கருத்துகள் இல்லை: