வியாழன், 3 ஜூன், 2021

ஜக்கியிடமிருந்து என் பெண்களை மீட்பேன் -தந்தைக்கு நம்பிக்கை தந்த ஆட்சி மாற்றம்!

isha

isha

நக்கீரன்  :ஜக்கியிடமிருந்து என் பெண்களை மீட்பேன் -தந்தைக்கு நம்பிக்கை தந்த ஆட்சி மாற்றம்!
"ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்கப் போன என் இரு மகள் களான லதாவையும் கீதாவையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோக மையத்திலேயே வைத்துக் கொண்டார் ஜக்கி வாசுதேவ். அவரிடமிருந்து என் இரு மகள்களையும் மீட்டுக் கொடுங்கள்...' என தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற காமராஜ் பல இடங்களில் புகார் அளித்தார்.
"எங்கள் இரு பெண்களுக்கும் மொட்டையடித்து, சாமியாராக ஆக்கியிருக்கிறார் ஜக்கி. இளம் பெண்களுக்கு மொட்டையடித்ததை பார்த்துக்கொண்டு இந்த பெத்தவயிறு பத்திக்கிட்டு எரியுதுங்கய்யா? அவுங்களை ஜக்கியிடமிருந்து மீட்டு கொடுங்கய்யா. எத்தனையோ இடங்களில் புகாரளித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை...'' என்றார் காமராஜின் மனைவி சத்யஜோதி.
அவர்கள் நம்பிக்கையுடன் நாடியது நக்கீரனைத்தான். இது குறித்து இப்போது பேசும் காமராஜ்... "எங்கள் இரு பிள்ளை களை மீட்டுக் கொடுங்கள் என அர சாண்டவர்களிடமும், காவல் துறை அதி காரிகளிடமும் சொல்லினோம். எந்த இடத் திலும் எங்கள் அழுகுரல் கேட்கவில்லை. கேட்டது நக்கீரனுக்கு மட்டும்தான். நக்கீரன்தான் எங்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது.


வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், நொய் யல் நதியின் குறுக்கே யானைகள் வழித் தடத்தை மறைத்துக்கொண்டார் ஜக்கி. பல நூறு ஏக்கர் பரப்பளவில் பல மாடிக் கட்டிடங்களும், நீச்சல் குளமும் கட்டிக்கொண்டார். எங்கள் விசயத்தை வெளிக்கொண்டு வந்த கையோடு, நக்கீரன் ஜக்கியின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்து உலகையே அதிர வைத்தது.
அதோடு ஈஷாவின் மீது சுற்றுச்சூழல் மீறல், யானை வழித்தடம் மறித்து, மின்சார வேலியுடன் கூடிய பல மீட்டர் அகலமுள்ள பாறாங் கல்லில் தடுப்புச் சுவரை அமைத்துக் கொண்டார். "காவேரி கூக்குரல்' என்கிற பெயரில் பல கோடி ரூபாய் பணம் சுருட்டல், பல லட்சம் மரங்கள் காணாமல் போனது.
சிவராத்திரி போன்ற மதம் சார்ந்த விழா விற்கு 5 லட்சமும், முன் வரிசையில் அமர 50,000 ரூபாயும், மத்திய வரிசையில் அமர 5000 ரூபாயும் டிக்கெட்டும் போட்டு, இறைவனை தரிசிக்க ஆட்டம், பாட்டத்துடன், வரிவிலக்கு வாங்கி வரு மானக் கொள்ளை செய்தது... என நக்கீரன் ஒவ்வொன்றாய் வெளிக்கொண்டுவர, நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பார்க்க தைரியமாய் சென்றோம்.
"இது சைலென்ஸ் ஹவர். பார்க்க முடியாது' என்றார்கள். அமைதி நேரம் என்பது, உரிய உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்யும் செயலாகும். "நீங்கள் இங்கே வருவதால் உங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதனால் இங்கே வரவேண்டாம்' என்று இரு மகள்களும் சொன்னார்கள். பெற்றபிள்ளைகளைப் பார்க்க அனுமதியில்லை. தமிழக அரசின் இந்து அறநிலை யத் துறை அமைச்சர், "அறநிலையத்துறை கோயில் களின் சொத்துக்களை ஒளிவுமறைவின்றி இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிடப்படும்' என்று சொன்னதற்கு பாராட்டு தெரிவித்தார் ஜக்கி.
அதேபோல ஈஷாவில் எத்தனை பேர் சாமி யார்களாக ஆக்கப்பட்டுள்ளனர்? அவர்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் எவ்வளவு? ஜக்கியின் 14 கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்ட விவரங் கள்? அதோடு எங்கள் இரு பெண்பிள்ளைகள் நேர்ந்துகொண்டிருக்கும் கொடுமைகள் குறித்தும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட 13 துறை களுக்கு என் புகாரை அனுப்பினேன். உடனே முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து விசாரிக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.
உடனே ஈஷா எல்லைக்குட் பட்ட போலீஸ் ஸ்டேஷன் ஆலாந்துறை போலீஸார் என்னைத் தொடர்பு கொண்டு... "என்ன சார்..முதலமைச்சர் வரைக்கும் கொண்டு போயிட்டீங்க. எங்களையே வந்து பார்த்து இருக்கலாம் இல்லையா?'' என்றார்கள் பதறியபடி.
"சார்... போன ஆட்சியில் உங்க ஸ்டேசனுக்கு மட்டும் நடையாய் நடந்து இருக்கறேன். ஒரு நடவடிக்கையும் நீங்க எடுக்கவேயில்லை. ஜக்கியின் போலீசாகவே நடந்து கொண்டீர்கள். அதனால் தான் நான் தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றேன்' என்றேன்.
"சார், கொஞ்சம் பொறுங்க. ஈஷா மையத்திற்கு போய் உங்கள் பொண்ணுகளை பார்த்து , பேசிவிட்டு எப்படியாவது உங்களிடம் கொண்டுவந்து சேர்த்து விடுகிறோம்' என்று சொன்னார்கள். நான் பட்ட கஷ்டத்திற்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன். எங்கள் பிள்ளைகளை ஜக்கியின் பிடியில் இருந்து மீட்போம் என நம்பிக்கை பிறந்திருக்கிறது. எங்கள் பிள்ளைகளை ஜக்கியின் பிடியில் இருந்து வெளிக்கொண்டுவர எங்களோடு சேர்ந்து போராடிய நக்கீரனை மறக்கமாட்டோம், ஆயுள் உள்ள வரைக்கும்'' என்கிறார்கள் காமராஜூம், சத்யஜோதியும் கண்களில் நன்றிப்பெருக்கோடு
 --நக்கீரன்

கருத்துகள் இல்லை: