வெள்ளி, 4 ஜூன், 2021

கொரோனா Task Force தலைவர் பூர்ணலிங்கம்! ( அதிரடி அதிகாரி) கொரோனாவை வெல்லப்போகும் நாள் தொலைவில் இல்லை

May be an image of 1 person

உதயசூரியன் : இன்று முதலைமச்சர் ஸ்டாலின் தேர்வு  தான் இந்த ஒரு மாதத்தில் அவர் எடுத்த மிகச்சிறந்த தேர்வு எனலாம்.
தலைமை செயலாளர் இறையன்பு, உதயச்சந்திரன் IAS (தனி செயலாளர்), ஷங்கர் ஜிவால் IPS தேர்வுகளை காட்டிலும் இன்றைய திரு பூர்ணலிங்கம் IAS தேர்வு மிகச்சிறந்த ஒன்று. அதிகம் பேசப்படவில்லை. ஆனால் கட்டாயம் பேசப்பட வேண்டிய ஒன்று...
திரு பூர்ணலிங்கம் IAS - இன்று தமிழ்நாடு அரசின் கொரோனா Task Force தலைவராக அறிவிக்கபட்டுள்ளார்.
யார் இவர்.? இவரை தேர்ந்தெடுக்க காரணம் என்ன.? இவருக்கும் திமுக அரசிற்குமான இணக்கம் என்ன.? பார்ப்போம் வாருங்கள் !
தமிழ்நாடு மருந்து பொருள் சேவை (TNMSC) தொடங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அந்த அமைப்பால் செயல்பட முடியாத சூழல். அந்த நேரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தலைவர் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றார்..


TNMSC பணிகள் என்பது மருந்துகளை வாங்குவது, மருத்துவமனைகளுக்கு பிரித்து கொடுப்பது, மருந்து கையிருப்பை உறுதி செய்வது.
TNMSC தலைவராக பூர்ணலிங்கம் அவர்களை தலைவர் நியமித்தார் தலைவர் கலைஞர். முழுசுதந்திரம் அளித்து செயல்படவிட்டார்.
பூர்ணலிங்கம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோய்கள், மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அறிக்கையை கலைஞரிடம் சமர்ப்பித்தார்.
அறிக்கையின் சாராம்சங்கள் வெளியாகின.
அன்று TNMSC அதிர்ந்தது. ஒன்றிய அரசின் அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர்  கோபாலபுரம் வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கலைஞர் கண் அசைத்தார்.
மருந்து தேவை என உலகளாவிய டெண்டர் வெளியிட்டது அன்றைய கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு...
நோய்க்கான மருந்துகளை மக்களிடம் சரியான நேரத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே உலகளாவிய டெண்டர் வரை சென்றது.
மருந்து கொடுக்கறேன் நீ வந்தா நான் வாங்கிடனுமா.? யார் நீ உன் மொத்த தகவலும் வேண்டும்" என்பதே அவரின் முதல் கண்டிஷன்.
அனைத்தையும் வாங்கிக்கொண்டு அந்நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர்களின் client களிடம் நிறுவனம் குறித்தும் தரம் குறித்து கேட்டறிந்து நிறுவனங்களை தேர்வு செய்வார்..
டெண்டர் உறுதி செய்யப்பட்ட நிறுவனத்தை விடுத்து 2, 3 என்று வரிசைப்படுத்தி மற்ற நிறுவனங்களை வைத்திருப்பார். வெளிப்படையாக அந்த நிறுவனங்களுக்கும், டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கும் அதை தெரியப்படுத்திவிட்டு,
உங்களை நம்பி நாங்கள் இருக்கிறோம். உங்களை மட்டும் நம்பி இல்ல. மக்கள் உயர் காக்க மருந்து தேவை அவசரமாக தேவையெனில் அவர்களுக்கும் தனி டெண்டர் கொடுக்கப்படும்" என்பதே அவரின் வாய்மொழி.
தரசான்று பெற்ற தொழிற்சாலை தான் பங்கேற்க வேண்டும் என்பது அவரின் 2வது கண்டிஷன்.
கலைஞர் எந்தளவு சுதந்திரம் கொடுத்தாரா அந்தளவு அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர் போல் நாடு முழுவதும் ஓடினார். மருந்துகள் தமிழகம் வந்தது. பிரதான நோய்களுக்கான மருந்து தேவைகளை நாம் பூர்த்தி அடைந்தோம். உபரியாக பெற்றிருந்தோம் என்பதே உண்மை.
மருந்தை பிரித்து கொடுக்க வேண்டும். அதற்காக மாவட்டம் தோறும் உருவாக்கப்பட்டதே TNMSC மாவட்ட கிடங்குகள். அனுப்பிவைத்தர்..
மருந்து தேவை. டெண்டர் விட்டார்.
மருந்து கிடைத்தது. பிரித்து கொடுத்தார்.
ஆனால் தரம்.?
மருந்துகள் வந்த உடன் தரம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சரியாக இருந்தால் பணம். இல்லையேல் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும். இதுவே அவரின் கண்டிஷன் 3..
பல சோதனை கூடங்களுக்கு அனுப்பி, மாறுத்தலான முடிவுகள் வந்த மருந்துகளை வழங்கிய நிறுவனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்..
கடமை முடிந்தது என்றில்லாமல் அடுத்ததாக மருந்து பதுக்கல் நடந்தால் என்ன செய்ய, கள்ள சந்தை வியாபாரம் பெருகினால் மக்கள் என்னாவர்கள் என்று யோசித்து தீர்வை முடிவு செய்து கலைஞரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இம்முறை பல அரசு மருத்துவமனை முதல்வர்கள் பதறிக்கொண்டு வந்தார்கள். ஏனெனில் அந்த முடிவு இதுதான்
கிரெடிட் கார்டு" முறை. மாவட்ட மருந்து கிடங்குகளில் மருத்துவமனைகள் தேவையான மருந்துகளை வாங்கி கொள்ளலாம். கிரெடிட் லிமிட் உட்பட்டு. அதிகம் தேவையெனில் தலைமையகத்தை தொடர்பு கொள்ள அறிவுத்தப்பட்டனர்.
மருந்து பதுக்கல் வீணாக்குதல், கள்ள சந்தை வியாபாரம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். பல கோடி அரசிற்கு வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டு,
TNMSC தலைவர் பூர்ணலிங்கம் கொண்டாடப்பட்டார் அன்று.
இந்த பூர்ணலிங்கத்தை தான் கொரோனா Task Force தலைவராக இன்று நியமித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அன்று கலைஞர் எந்தளவிற்கு பூர்ணலிங்கம் IAS அவர்களை நம்பினாரோ, அதே நம்பிக்கையை இன்று முதலமைச்சர் ஸ்டாலினும் வைத்து அவரை தேர்தெடுத்திருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி தேவையென்ற தமிழ்நாடு அரசின் உலகாளவிய டெண்டர், Task force தலைவராக பூர்ணலிங்கம், உமாநாத் IAS (முதலமைச்சர் தனி செயலர், TNMSC MD) படையை வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது..🖤❤️
கொரோனாவை நாம் வெல்லப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை
#MKSEra
 உதயசூரியன் - The Rising Sun

கருத்துகள் இல்லை: