செவ்வாய், 1 ஜூன், 2021

சின்மயி போன்ற சாதிவெறிச்சிகளின் எழுச்சியின் போதெல்லாம்.. கவிதா சொர்ணவல்லி!

May be an image of 2 people, beard and text that says 'சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்'

கவிதா சொர்ணவல்லி :    நிறைய யோசித்தே இதை எழுதுகிறேன்.
'இட ஒதுக்கீடு காரணமா என்னோட உறவினர்கள் பாதி பேரோட கனவுகள் நிறைவேறாமலே போச்சு.
Upsc exam எழுத நெனச்ச பாதி பேர் இட ஒதுக்கீடு காரணமா, பரீட்சை எழுதாமலே வெளில போய்ட்டாங்க'
'சென்னைல மின் திருட்டு (அ) மின்சாரத்தை  வீணடிப்பது சேரி வாழ் மக்களே'
"மீனைக் கொல்லும் மீனவனைக் கொல்வது தவறில்லை' என்பது  உட்பட பல சாதி துவேஷ பதிவுகளை தன்னுடைய டிவிட்டரில் 2010 ல் துப்பியவர்தான் சின்மயி.
இந்த ட்வீட்களை, நான் எழுதவேயில்லை என்று சாவர்க்கர்களின் வாரிசான சின்மயி இப்போது மறுக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்திலேயே, இவ்விவகாரம் குறித்து  விமாலாதித்த மாமல்லன் எழுதிய 'சின்மயி விவகாரம்' புத்தகமே, சின்மயியின் பொய்களுக்கும், அதிகார அகங்காரத்திற்கும் எஞ்சி நிற்கும் ஒரே சாட்சி.    சின்மயி தாய் பத்மாசினி லால்குடி ஜெயராமன்


இவருடைய, சாதி வெறி பதிவுகளுக்கு எதிராகத்தான், டிவிட்டரில் அவருக்கு எதிரான கடும் கண்டன கருத்துக்களை பலர் எழுதினார்கள். முகநூலில், நான், அனு அக்கா உட்பட ஏராளமானோர் கடுமையாக எதிர்த்து எழுதினோம்.
(நான் முகநூல் அக்கவுன்ட் ஆரம்பித்த சில நாட்களிலேயே இதுதான் நடந்தது)
அப்போதைய முதலமைச்சரான, உலகப் பெண்ணியவாதி  அம்மையாரின் (தங்கள் சாதிக்கான) ஆட்சியை,  ஆங்கிலப் பத்திரிக்கைகளின் நிலவிய (தங்களின்) சாதி ஆதிக்கத்தை, சரியாக பயன்படுத்திக் கொண்டவர் சின்மயி.
அதன் காரணமாகவே, டிவிட்டரில் சின்மயியை எதிர்த்து கருத்து தெரிவித்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.   
இதில் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இன்று 'தலித்துகள் என்ற கேடயத்தை தன்னுடைய  புகழ் வெளிச்சத்திற்காக' எளிதாக சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.   
ஆனால், அந்த dalith card கூட, சின்மயியின் சாதிக்கு  முன்பாக, சின்மயி சாதியின் அதிகார அகங்காரத்திற்கு முன்பாக, மயிரைக் கூட புடுங்க முடியாது என்று நிரூபித்தது அந்தக் கைதுகள்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தலித். கல்லூரி விரிவுரையாளர் என்று நினைக்கிறேன். அவருடைய வாழ்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. இன்று அவர் என்ன செய்கிறாரா ? மேளக்கார சாதி என்று எழுதிக்கொண்டிருக்கிறார்.
இருக்கட்டும். இப்படியான அதிகார துஷ்ப்ரயோகத்தின், அதிகார அகங்காரத்தின் மொத்த முழுவடிவம் சின்மயி.
இந்தக் கதைகளை எல்லாம் தெரிந்த சூத்திரச்சிகள், சூத்திரச்சி ஆகத்துடிக்கும் தலித் அறிவிலிகள்,சின்மயி என்கிற சாதிவெறி பிடித்த பெண்ணை, அப்பாவி பெண்ணாக சமூக ஊடகத்தின் முன்பு,   கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல்  potrait செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் சின்மயியின் வருத்தம் என்பது, உலகப் பெண்ணியவாதி அம்மையார் இல்லை என்பதும், மைலாப்பூரின் முன்னாள் எம்எல்ஏவான,  நடராசன் ஐபிஎஸ் போன்ற நேர்மையாளர்கள் பணியில் இல்லை என்பது மட்டுமே இருக்கக்கூடும்..
சூத்திரர்களால், பஞ்சமர்களால் ஆன அரசாங்கத்தில், தன்னுடைய அகங்காரத்தை கட்டவிழ்த்து விட, வழி தெரியாமலே, தலைகீழாக கவிழ்ந்த கரப்பான் பூச்சியைப் போல பதறிக்கொண்டிருக்கிறார்.       
இவருக்கு ஆதரவளித்து பல்லிளிக்கும் சூத்திரச்சிகளைப் பார்க்கையில், சாதிவெறியை  வெறும் rationalist-டாக இருப்பதனால் மட்டுமே ஒழிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேல்சாதியாக துடிக்கும் ஒவ்வொரு மனதுக்குள்ளும், சாதி வெறி கருக்கொண்டே இருக்கிறது. அது சின்மயி போன்ற சாதிவெறிச்சிகளின் எழுச்சியின் போதெல்லாம், சலாம் போட்டு, தன் வால் நக்கிக்கொள்கிறது.
சின்மயி போன்ற சாதி வெறி பிடித்தவருக்கு, எக்காலத்திலும் ஆதரவளிக்காத பெண்கள் யாரென்று பார்த்தால், தீர்க்கமான பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறது. Kudos.
ps: 'இது ஒரு ஆணாதிக்க மனநிலையான பதிவு' என்று உச்சு கொட்ட இருக்கும் சூத்திரச்சிகளுக்கு 'அயோக்கியத்தனங்களை, சாதி வெறியை எல்லாம் பெண்ணியம் என்று வரையறுக்கும் இடத்தில், நான் male chauvinist-டாக முத்திரை குத்தப்படுவதில்  கும்த்தாவாக உணர்கிறேன்.  
ps: இந்தப் பதிவை எடுத்து,  சின்மயிக்கு ஆதரவாக பல்லிளிக்கப் போகும்,  சூத்திரச்சிகள், apu-க்களுக்கு எல்லாம் 😛 i  dont give a shit 😛 fake ஐடிகள் என் பின்னால் திரிய அனுமதிக்கப்படுகிறார்கள்

கருத்துகள் இல்லை: