சனி, 5 ஜூன், 2021

“கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்" பிறந்ததினம்இன்று. ( 05 ஜூன் 1914 )

May be an image of 1 person

Sundar P  : தஞ்சை இராமையாதாஸ் ..  (சூன் 5, 1914 - சனவரி 15, 1965)
கவிஞர், திரைப் பாடலாசிரியர், வசனகர்த்தா....
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.
தஞ்சை இராமையாதாஸ் சூன் 5, 1914 இல் தஞ்சாவூர், மானம்பூச்சாவடியில், நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்குப் பிறந்தார்.
இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்று இரண்டு மனைவிகள்...
இராமையாதாஸ் தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
திரைப்படத்துறையில் கொண்ட  ஈடுபாடு காரணமாக
ஜெகந்நாத நாயுடு என்பவரின் நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார்.


அப்போது,  1947இல், டி. ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸின்  "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இதனை அடுத்து, திகம்பர சாமியார் (1950), சிங்காரி (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
 இராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950-இல் சென்னைக்கு அழைத்தார்.
இதனை அடுத்து நாகி ரெட்டியின் பாதாள பைரவி, மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.
இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை எம்.ஜி.ஆர். நடிப்பில்  "குலேபகாவலி" என்ற திரைப்படமாகியது.
இப்படத்தில் இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... போன்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன.
மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
இராமையாதாஸ் 1962 ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்  (மிஸ்ஸியம்மா)
சொக்கா போட்ட நவாபு (குலேபகாவலி)
மயக்கும் மாலை பொழுதே... (குலேபகாவலி)
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
அழைக்காதே! நினைக்காதே!  (மணாளனே மங்கையின் பாக்கியம்)
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!  (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வாங்க மச்சான் வாங்க, (மதுரை வீரன்)
தஞ்சை இராமையாதாசின் கலைப்படைப்புகள் 2010 ஆம் ஆண்டு சூலை 16 இல் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு அவரது வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு இலட்சம் பணமும் வழங்கப்பட்டது.

 May be an image of 1 person and text that says 'DA.60 தஞ்சை ராமையாதாஸ் ராமையாத'

கருத்துகள் இல்லை: