சனி, 5 ஜூன், 2021

கலைஞரை தவறாக காட்டி முகநூல் பதிவு .. அதிமுக பிரமுகர் கைது- (அதிமுக ஐ டி விங் ரவுடி?)

May be an image of 1 person and text that says 'முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிரமுகர் கைது வாய்மேடுஜமன். வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன் புலம் 3-ம் சேத்தி நைனான் குத்தகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது27) இவர் அ.தி.மு.க. தகவல் தொழில் பிரிவில் இணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் முகநூலில் முன்னாள் முதல்-அமைச் கருணாநிதியை தவறாகசித்தரித்து படம் வெளியிட்டதாக வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி. மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருள்சே கர் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ்இன்ஸ்பெக்டர்ஜெகதீசன் மற்றும்போலீசார்வழக் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசா வருகின்றனர்.'

LRJ  : இந்த செய்தியையும் கைதுசெய்யப்பட்ட நபரின் சம்பந்தப்பட்ட Facebook பதிவையும் ஒரு நண்பர் அனுப்பி இந்த கைது சரியா என்று கருத்துக்கேட்டார்.
கேட்டவர் ஊடகர். கருத்துசுதந்திர பார்வையை முன்வைத்த கேள்வி அது.
சம்பந்தப்பட்ட Facebook பதிவு வக்கிரம் நிறைந்தது பொதுவில் பகிரத்தக்கதல்ல என்பதால் இங்கே பகிரவில்லை.
கைதாகியிருப்பவர் அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப்பிரிவின் இணைசெயலாளர் என்று இந்த செய்தி சொல்வதால்,
இவரை இந்த விவகாரத்தில் ஒரு அரசியல்வாதியாகவே அணுக முடியும் என்பதால்.
இந்த விவகாரத்தை ஒரு அரசியல் வினை எதிர்வினையாக பார்ப்பதே சரி என்றேன். ஆனால் அந்த ஊடகர் அதை ஏற்கவில்லை.
பேச்சினூடே இவரது பதிவைவிட மிக மோசமாக முன்னணி செய்திப்பத்திரிகைகளான குமுதமும் விகடனும் கலைஞரைப்பற்றியும் அவர் குடும்பத்து பெண்கள் பற்றியும் அட்டைப்படக்கட்டுரைகளே வெளியிட்டதை சுட்டிக்காட்டி,


அதற்குப்பின்னும் அந்த இருபத்திரிகைகளும் எந்த பெரிய நெருக்கடிகளையும் திமுகவாலோ திமுக ஆட்சியாலோ சந்திக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
இந்த கைது ஊடகசுதந்திரம்/கருத்துசுதந்திரத்தை பாதிக்கும் விவகாரமாக பார்க்கப்படத்தேவையில்லை என்பது என்வாதம்.
ஆனால் ஊடக நண்பர் அதை ஏற்கவில்லை.
அப்போது குமுதம் அட்டைப்பட விவகாரம் பற்றிய பேச்சோடு பேச்சாக அந்த ஆபாச அட்டைப்படத்துக்கு எதிராக கட்சிகடந்தும் கலைஞரின் ஆதரவாளர்கள் குமுதத்தை கண்டித்துக்கொண்டிருந்தபோது கலைஞர் வீட்டில் இருந்து அதே குமுதத்தின் இன்னொரு பத்திரிகையில் கட்டுரையைத் தொடர்ந்த “நட்டநடுநிலை நல்லுள்ளம்” பற்றியும் பேச்சு வந்தது.

காலம் தான் எவ்வளவு விசித்திரமானது? கலைஞர் மீதான ஆபாசத்தாக்குதலை மூர்க்கமாய் எதிர்க்கக்கூடிய ஏராளமான ஆதரவாளர்களை கட்சி எல்லையை கடந்தும் கலைஞருக்கு கொடையாய் பெற்றுத்தந்த காலம், அவர் மீதான தரம்குறைந்த தாக்குதலை கண்டுரசித்த குடும்ப உறுப்பினர்களையும் உருவாக்கியிருந்த கொடுமையை என்ன சொல்ல?

அல்லது ஆனப்பெரிய பெண்ணீயவாதியாக கட்டமைக்கப்படும் ஜெயலலிதா என்கிற பெண் தலைவியால் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சியின் 27 வயது இளம்தலைமுறை அரசியல்வாதி பெண்களை ஆபாசப்படுத்தி தான் தன் அரசியல் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் பொதுவில் காட்ட முடியும் என்கிற வக்கரித்துப்போன “பரிணாம வளர்ச்சியை” என்ன சொல்ல?

Moral of the story-- கலைஞர் வீட்டு ஆட்கள் எல்லோரும் அவரை உண்மையிலேயே மதித்தவர்களும் அல்ல; பெண் தலைவியால் உருவாக்கப்பட்ட இளம்தலைமுறை அரசியல்வாதிகள் பெண்களை மதிப்பார்கள் என்பதும் சரியல்ல.

கருத்துகள் இல்லை: