திங்கள், 31 மே, 2021

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை ? வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு ....

Prakash JP : சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்".!
தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு தளம் எது என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் காட்டிவிட்டது என, திமுக தலைமை நம்புகிறது.
தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு நிதி முதல் பல்வேறு உதவிகளை செய்தது என்று, மாநில உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது.
கலைஞர் இருக்கும் வரை மார்வாடிகளையும், குஜராத்திகளையும் அரவணைத்து சென்றார்.
அவர்களும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தனர்.
ஆனால் மோடியின் இரண்டாவது வெற்றி அவர்களை மாற்றிவிட்டது.
வடநாட்டினர் எந்நேரம் அழைத்தாலும் ஓடிப் போய் உதவி செய்தவர் சேகர்பாபு.,
ஆனால் அவருக்கு இம்முறை வடநாட்டினர் ஓட்டு அளிக்கவில்லை.
சேகர்பாபு பெரிதும் நம்பியிருந்த சௌகார்பேட்டை பாஜக விற்கு அப்படியே மாறிவிட்டது.
இது முதல்வர் ஸ்டாலினையும்  அதிகம் யோசிக்க வைத்துவிட்டது.
கோவையிலும் அதிக அளவு வடநாட்டினர் வெளிப்படையாகவே பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டதும் திமுகவை இன்னும் உறுத்தி வருகிறது.
இந்நிலையில்தான் சேட்டுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அன்மையில் பேசியது பரபரப்பாகியது.


"நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காவிட்டாலும் உங்களுக்கு உழைப்போம்" என்றுதான் அவர் பேசினார். ஆனால் அதை சர்ச்சையாக்கினார் வானதி. சேகர்பாபுவுக்கு இம்முறையும் எந்த வடநாட்டினரும் ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை.

இதை கேட்டு நெற்றி சுருக்கிய ஸ்டாலின் " நீங்க கமர்சியல் டேக்ஸ் டிப்பார்ட்மெண்டை கொஞ்ச நாள் பாருங்கள்.
அதாவது சட்டப்படிதான் எல்லோரும் நடந்துகிறாங்களா என்று அதிகாரிகளுடன் இணைந்து பாருங்கள்". என்றிருக்கிறார்.
இதை அறிந்த சென்னை கோவை மதுரை சேட்டுக்கள் வயிற்றில் புளியை கரைத்துகொண்டுள்ளனர். காரணம் 80% இரண்டாம் நம்பர் பிஸ்னஸ்தான் செய்து வருகிறார்கள்.
தேவையில்லாமல் சில்லறை சிதற விட்டது வம்பாப்போச்சு என பாஜக கொடியை கண்டாலே எடுத்து பிடித்து ஓடுகிறார்களாம்.
சேகர்பாபு யார் என்று தெரிந்த வயதான மார்வாடிகள் இதெல்லாம் பிழைக்க வந்த் இடத்தில் நமக்கு தேவையா? என்று பேரர்களை கடிந்து கொண்டார்களாம்.

 

கருத்துகள் இல்லை: