ஞாயிறு, 23 மே, 2021

கனிமொழி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்

புதிய தலைமுறை :  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.   
இதனைத்தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கனிமொழி வெளியிட்ட பதிவில்,
 ''மே 22, ஒரு அரசு, அமைதியாக போராடிய குடிமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட கருப்பு நாள்.
இனி, மக்கள் தங்களுக்கு எதிராக போராடும் துணிச்சலை தகர்க்க அதிமுக அரசு செய்த இரக்கமற்ற பெருங்குற்றம்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து மூன்று வருடங்கள் முடிந்த நிலையில், தற்பொழுது பொறுப்பேற்றுள்ள தளபதி தலைமையிலான தி.மு.க. அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் குடும்பத்தினர் கொடுங்காயமுற்றவர் என மொத்தம் 17 பேருக்கும் அரசு பணி வழங்கியுள்ளது.

மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை அரசு திரும்பபெறும் என்றும்,
காவல்துறையால் கைது செய்யப்பட்ட 94 நபர்களுக்கு நிவாரணத்தொகை, அவர்களின் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கு தடையில்லா சான்றிதழ் போன்றவற்றை அறிவித்திருக்கிறது.
தி.மு.க. என்றுமே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் என்பதற்கு இதுவே சாட்சி. கூடிய விரைவில் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார் கனிமொ

கருத்துகள் இல்லை: