செவ்வாய், 25 மே, 2021

பாலியல் புகாரில் சிக்கிய பத்ம சேஷாத்திரி பள்ளிக்கூட வாத்தியார் ராஜகோபாலன் வரதாச்சாரியார் கைது போக்சோ பாய்ந்தது

May be an image of 1 person and text that says 'முக்கிய செய்தி பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் ண பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலம் மா எவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாக வாக்குமூலம் 24/05/2021 தந்தி Thanthi TV THANTHITV'
minnambalam : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரிலுள்ள  பத்ம சேஷாத்திரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் வரதாச்சாரியார் மீது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்புவது, ஆன்லைன் வகுப்பின்போது அரைகுறை ஆடையுடன் வருவது, தவறான நோக்கத்துடன் தொட்டு பேசுவது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்னாள் மாணவர்கள் அமைப்பு வைத்தது. இதையடுத்து, ராஜகோபாலன் வரதாச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரச்சினை பெரிதாக வெடித்ததையடுத்து, ராஜகோபாலன் வரதாச்சாரியார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், ராஜகோபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்குட்படுத்தினர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச படம், குறுஞ்செய்திகளை ராஜகோபாலன் வரதாச்சாரியார் நீக்கியுள்ளார். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீண்டும் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிட்டதட்ட 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததும், மாணவிகளிடம் அந்தரங்க போட்டோவை அனுப்ப வற்புறுத்தியதும், பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் வரதாச்சாரியார் கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பல மணி நேர விசாரணைக்கு பின்பு, ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் மூலம் புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எந்தவித அச்சுறுத்தலும் வராது என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் 9444772222 என்ற செல்போனில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

கருத்துகள் இல்லை: