ஞாயிறு, 23 மே, 2021

ஸ்பெயின் விவசாயிகளும் இந்திய விவசாயிகளும் - சின்டிகாலிசத்தின் கொடூரம்!:

May be an image of outdoors
புகச்சோவ் : சின்டிகாலிசத்தின் கொடூரம் : கடந்த பெப்ரவரி 2020 ல் ஸ்பெயினின் விவசாயிகள் மாடுகளையும் டிராக்டர்களையும் நகரத்திற்குள் ஓட்டிவந்து நகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர்!!! ஸ்பெயினின் விவசாய அமைச்சகம் அறிவித்த அதிரடி விலைகுறைப்பு மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கான கூலியில் ஏற்படுத்தப்பட்ட சம்பளக்குறைப்பு, பால் மற்றும் அத்யாவசிய பொருட்களை கொள்முதல் செய்யாமல் விரயமாக்கிய கார்ப்பொரேட்டுகளின் சதி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மீதான விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து, நாடுமுழுக்க வாழும் விவசாயிகள் சேர்ந்து, நகரங்களை ஸ்தம்பிக்கச்செய்தனர்.
மாடுகள், டிராக்டர்கள் மற்றும் விவசாய எந்திரங்களை நகரங்களின் முக்கியமான சாலைகளில் நிறுத்தி இயங்கவிடாமல் செய்தனர். ஆனாலும் ஸ்பெயின் அரசு எதையும் கண்டுகொள்ளாது விவசாயிகளை அம்போவென தெருவில்விட்டது. மிகக்குறைந்த விவசாயம் நடக்கும் நாடுகளிலொன்றான ஸ்பெயின், விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளிக்காதது, இறக்குமதியை நம்பியே வாழ்கிற நிலையை அரசு உண்டாக்குவதாக தெரிகிறது, என பெரும்பான்மை விவசாயிகள் கூறுகின்றனர்.
ஸ்பெயின் அரசாங்கம் கூறுவதாவது, ஐரோப்பிய யூனியனின் CAP எனும் காமன் அக்ரிகல்ச்சர் பாலிஸி அமைப்பினர், ஸ்பெயினுக்கு தரவேண்டிய சில சப்ஸீடிகளை நிறுத்திவைத்துள்ளது. இதனாலெழுந்த சூழலை பயன்படுத்தி கார்ப்பொரேட் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு, விவசாய உணவுப்பொருட்களை கேட்கின்றனர். அதன்விளைவாக, பதப்படுத்தி வைக்கமுடியாத விவசாய விளைபொருட்கள் தேங்கிப்போய் நாசமாகின்றன. எனவேதான் இந்த விலைகுறைப்பு மற்றும் சம்பளக்குறைப்பு நீடிக்கிறது. நிலைமை சரியாவதுவரை பொறுத்துதான் ஆகவேண்டும் என்கிறது.
விவசாயி ஒருவரின் குமுறல், ஒருகிலோ உருளைக்கிழங்கு எங்களிடமிருந்து
0.17 யூரோவுக்கு வாங்குகிற கார்ப்பொரேட் வியாபாரிகள், அதே ஒருகிலோ உருளைக்கிழங்கை
1.25 யூரோவிற்கு எங்களுக்கே விற்பனை செய்கின்றனர். கிட்டத்தட்ட எட்டுமடங்காகிறது. இதுபோன்று உலகில் வேறெங்காவது நடக்குமாவென கேட்கிறார்.
அடக்கருமமே! நாங்கள் இந்தியாவில் 70 வருஷமாக, நாங்க விளைவித்த பொருட்களையே 15 மடங்கு அதிகவிலையோடு திரும்பவாங்கி சாப்புடுறோம் தெரியுமா!?
இத்தனைக்கும், எந்த ஆசிய, ஐரோப்பிய யூனியனிலும் இல்லாதபோதே எங்கள்நிலமை மகாகேவலம். இப்போது ஆளுகிற பாசிஸ்ட்மோடி, புதுசா கொண்டுவந்துள்ள விவசாய மசோதா வரும்போது, நாங்கள் மேலும் பலமடங்கு விலைவாசியையும் சந்திக்க நேரிடும். நாங்கள் விளைவிக்கிற பொருட்களை, மோடியின் அப்பன்களான, அதானியும் அம்பானியும் ஓசியிலேயே அள்ளிட்டுப்போகப்போறான் என்பதுகூட தெரியாமல், எங்கள் மக்கள் நடிகர்களின் குண்டிகளை முகர்ந்துகொண்டு அலைகின்றனர்.
இன்னிக்கு இந்திய விவசாயிகளின் அவலநிலை போராட்டத்தை பற்றிய செய்திகளை அறிந்தால், ஸ்பெயின் விவசாயிகள் கண்டிப்பாக சுயம் தேற்றிக்கொள்வார்கள்!!

கருத்துகள் இல்லை: