புதன், 21 ஏப்ரல், 2021

நடிகர் அஜீத்தை படமெடுத்ததால் அப்போலோவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.. இரக்கம் காட்டாத அஜீத்

ஜாதகப்படி அஜீத் அரசியலுக்கு வருவார்: பிரபல இயக்குனர் | According to  horoscope, Ajith'll enter politics: Director - Tamil Filmibeat
tamil.abplive.com/ : நடிகர் அஜீத்தை வீடியோ எடுத்ததால் சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக பணியாற்றியவர் பர்ஷானா. மே மாதம் 23ஆம் தேதி மருத்துவமனைக்கு டாக்டர் கொண்டம்மாளை சந்திக்க வந்த நடிகர் அஜீத்தை ஆர்வ மிகுதியால் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாக கூறி, அஜீத்தின் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் பர்ஷானவை அப்போலோ நிர்வாகம் வேலையை வீட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. 

 தான் எடுத்த வீடியோக்கு மன்னிப்பு கேட்டும், மீண்டும் தன்னை பணியில் சேர்த்துக்கொள்ளாததால், மனமுடைந்த பர்ஷானா, அஜித்தை சந்தித்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவும், மீண்டும் தனக்கு பணி கிடைக்க வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்தார். கடந்த ஒரு வருடமாக அஜீத்தை சந்தித்து முறையிட அலைந்து வருகிறார் பர்ஷானா.

அஜித்தின் வீட்டு வாசலுக்கு பலமுறை சென்று, அங்கு காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெஃப்சி யூனியன் மூலம் அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அது பலனளிக்க, பர்ஷானாவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

‛என்னை நம்பு, உன் கஷ்டம் தீர்ந்துவிட்டது என்று எண்ணிக்கொள், உனக்கு தேவையான உதவியை நான் செய்து கொடுக்கிறேன்,’ என நம்பிக்கையாக அவரிடம் சுரேஷ் சந்திரா பேசியதாக கூறும் பர்ஷானா, மறுநாளே மீண்டும் தொடர்பு கொண்டு ‛அஜித் உங்களுக்கு உதவ மறுத்துவிட்டார் என்றும், வேண்டுமானால் குழந்தையின் கல்வி கட்டணமாக 10 ஆயிரம் கட்டச் சொல்லியுள்ளார்,’ என்று சுரேஷ் சந்திரா கூறியதாகவும் அதனால் தான் மனமுடைந்ததாக கூறுகிறார் பர்ஷானா. 

 

 கடந்த ஒரு வருடமாக வீட்டு வாடகை, குழந்தையின் கல்வி கட்டணம், தன்னுடைய மருத்துவ செலவு, வீட்டு செலவு, வயதான தாய், தந்தையின் பராமரிப்பு செலவு போன்றவைக்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளதாகவும், தயவு செய்து அஜீத்தை சந்தித்து முறையீட ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் சந்திராவிடம் அழுது புலம்பியிருக்கிறார் பர்ஷானா. தொடர்ந்து வாட்ஸ் அப்பில் தன்னுடையை நிலையை ஆடியோவாகவும், எழுத்து வடிலும் அனுப்ப, முதலில் பதில் அளித்த சுரேஷ் சந்திரா, பின்னர் அவரது எண்ணை பிளாக் செய்துவிட்டதாக தேம்பி அழுகிறார் பர்ஷானா. கணவர் டெய்லர், தனக்கு வேலையில்லை, கடன் தொல்லை, குழந்தைக்கான கல்வி கட்டணம் செலுத்த முடியாவில்லை என பல்வேறு மனஉளைச்சலால் மனம் உடைந்த பர்ஷானா, கடந்த ஏப்ரல் 1ம் தேதி, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டும், விஷம் உட்கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 




தற்கொலைக்கு முயன்ற வழக்கு சென்னை வளசரவாக்கம் போலீசாரால் விசாரிக்கப்பட, அங்கு வந்த அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் இனி உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் உதவப்போவதில்லை என சொல்லிவிட்டதாகவும், 10 ஆயிரம் மட்டுமே தர முடியும் என கறார் காட்டியதாகவும் சொல்லி கண்ணீர்விடும் பர்ஷானா, இதனால் ஆத்திரம் அடைந்து ”நான் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை, இழந்துவிட்ட என் வேலையை மீட்டு தாருங்கள் என்றுதான் கேட்கிறேன்” என ஆவேசமாக பேச, அங்கிருந்து சுரேஷ் சந்திரா கிளம்பி சென்றிருக்கிறார். ஆனால் இதுவரையில் அஜித் தரப்பிலிருந்து எந்த உதவியும் பர்ஷானாவிற்கு கிடைக்கவில்லையாம். 




நடந்தது குறித்து ABP நாடு இணையத்திற்கு பிரத்யேகமாக பேசிய பர்ஷானா, ‛‛தெரிந்தோ, தெரியாமலோ என் வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்த அஜீத் ஒரு காரணமாகிவிட்டார். அஜித்தின் உள்ளத்தை இந்த தமிழகமே அறியும், கஷ்டப்படும் அத்தனை பேருக்கும் உதவுபவர் அவர். என்னுடைய நிலையை அவரது கவனத்திற்கு கொண்டுச் சென்றால் நிச்சயம் எனக்கு மீண்டும் வேலை வாங்கித் தருவார் என இன்னும் நம்புகிறேன்,’’ என்றார். 



ரசிகர்களும், பொதுமக்களும் பொது வெளியில் ஒரு சினிமா பிரபலம் வரும்போது ஆர்வமிகுதியில் அவர்களை புகைப்படம் எடுக்க முயற்சி செய்வது இயல்பானது. கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் அஜீத் வாக்களிக்க வந்தபோது கூட ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயல, அவரது செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு, பின்னர் கொடுத்தார் அஜீத். ஆனால், அதே அஜித்தை வீடியோ எடுத்ததற்காக பர்ஷானாவிடமிருந்து பறிக்கப்பட்ட வேலையை மீட்டுக் கொடுப்பாரா அதே அஜீத்..?

கருத்துகள் இல்லை: