ஞாயிறு, 29 மார்ச், 2020

அசிங்கமான அரசியல்.. சொந்த நாட்டின் அகதிகள்

devi somasundaram : டெல்லி தலைநகரமா ராணுவ பாதுகாப்பில் உள்ள இடம்.தமிழ் நாட்ல பொறம்போக்கு இடத்தில் ஒரு குடிசை போடுவது மாதிரி டெல்லில போட முடியாது ..மிலிட்டரி துப்பாக்கி நீட்டி யார் நீன்னு கேட்க்கும் .ஆனால் அதிக கூட்டம் நிறைந்த வர்க்க வேறுபாட்டில் மேல் வர்க்க கூட்டம் அதிகம் உள்ள ஊர்.
அவர்களுக்கான வேலைகளுகாக பீகார்,ஒரிஸா, உபி போன்ற இடங்களில் இருந்து ஏராளமானோர் டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர் .
அவர்கள் தங்கி இருக்கும் இடம் மிக நெருக்கமான பகுதிகளா இருக்கும் .
பலர் எழுத படிக்கவே தெரியாதவர்கள் .இங்க சம்பாதித்து ஊருக்கு அனுப்பி அதன் மூலம் ஓரளவு வாழ்க்கையை சமாளிப்பவர்கள் .
ஒரு பிரச்சனை வந்தா அது ரிலேடடா என்ன பிரச்சனை வரும்னு யோசிச்சு அதுக்கு ஏற்ப திட்டங்கள வகுக்க தெரிபவர் தான் நல்ல நிர்வாகி..
நம் துரதுஷ்ட்டம் மக்கள் பிரச்சினை பற்றி சிந்திக்கின்ற ஆட்சியாளர் மத்தியில் ஒருவர் கூட இல்லை என்பது தான்..
கொரானா குவாரண்டைன் அறிவிக்கப்பட்ட போதே இவர்கள் சொந்த ஊர் திரும்ப வழி செய்து இருக்கனும்..அல்லது இவர்கள் பாதுகாப்பா தங்க ஏற்பாடு செய்து இருக்கனும்..கெஜ்ரிவால் அரசும் மக்களை பற்றி யோசிக்கவில்லை ..கெஜ்ரி.ஊழலை ஒழித்தாரோ இல்லயோ மக்களை ஒழித்து விடுவார் போல் இருக்கின்றது .

மத்திய ஆட்சியாளர்கள் பூஜை, கோமிய பிஸ்னஸ் என்று அமோகமா வாழ்கின்றனர்
பர்மா போரின் போது நடந்தே இந்தியாவை அடைந்த மக்களை போல் குழந்தைகள், வயதானவர் தலையில் சுமையோடு டெல்லி வீதிகளில் காப்பாற்ற யாரும் அற்று பயணிப்பது என்றும் இல்லாத கொடுரம் ..
மீ டூ பேர்வழிகள், தேஷ பக்தர்கள் என்று அத்தனை பேரும் நமக்கென்னனு இருப்பது அசிங்கமான அரசியல்..
சொந்த நாட்டின் அகதிகள்

கருத்துகள் இல்லை: