திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சீன -அமெரிக்க முறுகல் இலங்கையின் கட்டுமான பணிகளை பாதிக்கிறது

tamil.truenews.lk/ : சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் இலங்கையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம் உட்பட சீன 24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்கா எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் இந்த சீன நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டுமாயின் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி பெறப்படவேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் கொழும்பு துறைமுக நகரை நிர்மாணித்துவரும் சைனா ஹாபர் இன்ஜினியரிங் China Harbour Engineering Company கொம்பனியின் தாய் நிறுவனமான சைனா கொமியுனிகேஸஷன் கொன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனி China Communications Construction Company (CCCC), யையும் பாதித்துள்ள அமெரிக்காவின் இந்த நகர்விற்கு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.

இந்த நிறுவனமே ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள ராஜபக்ஷ விமானநிலையம் ஆகியவற்றையும் நிர்மாணித்திருந்தது.

‘மூன்றாவது நாடொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தலைப்பட்டமானதும் நியாயமற்றதுமான நடவடிக்கையின் காரணமாக இறைமையுள்ள நாடுகளான சீனாவினதும் இலங்கையினதும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களது வழமையான வர்த்தக ஒத்துழைப்பு பாதிக்கப்படும்’ என சீனத்தூதரகம் கருதுகின்றது என சீனத்தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் லூவோ சொங் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: