இந்நிலையில் 2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சேர்த்ததற்காக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை ஏற்கனவே முடக்கியது. இந்த நிலையில் தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துகளை 2003ல் இருந்து 2005ம் ஆண்டு வரை ஹரிச்சந்தனி எஸ்டேட்ஸ் என்ற பெயரில் சசிகலா வாங்கியதாகவும், போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பல்வேறு இடங்களில் 200 ஏக்கர் அளவில் இந்த சொத்துகள் இருப்பதாகவும் வருமான வரி தரப்பில் சொல்கிறார்கள்.சசிகலா மீது பயந்தது
சசிகலா தரப்போ இது வழக்கமான நடைமுறைதான் நாங்கள் வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சசிகலா விடுதலையை தாமதித்து, அதன் மூலம் வேறு சில அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இந்த சட்ட நடவடிக்கை உதவக் கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக