திங்கள், 31 ஆகஸ்ட், 2020

நியுஸ்18 தொலைக்காட்சியிலிருந்து ஜீவா சகாப்தனும் வெளியேறுகிறார் !

  Jeeva Sagapthan : · நியுஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறேன். 2016 ம் ஆண்டு தேர்தல் எண்ணிக்கை தொடங்கிய போது, முதல் விவாத நிகழ்ச்சியை நடத்தியது பசுமையாக கண்களில் விரிகிறது. அய்தராபாத்திற்கு பத்திரிகையாளர் ப்ரியன், ப்ரண்ட் லைன் ஆசிரியர் விஜய சங்கர், அய்யநாதன், ஆழி செந்தில்நாதன் ஆகியோரை அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் விவாதம் நடத்தினேன். அதன் பிறகு, சென்னைக்கு வந்து முதல் நேர்காணல் தமிழருவிமணியன் ,கார்த்தி சிதம்பரம்,பீட்டர் அல்போன்ஸ் என தொடர்ந்தது.அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை அழைத்து தொலைக்காட்சியை திறந்து வைக்க நிர்வாகம் முடிவெடுத்தபோது, தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் நேரில் சென்று அழைத்தேன். அனைவரும் வாழ்த்திச் சொல்லி உறுதியாக வருவதாக சொன்னார்கள்.


சேனல் எல்லா இடங்களிலும் தெரிய ஆரம்பித்த தருணத்தில் முதல் பார்வை என்ற காலை விவாத நிகழ்ச்சி உன் பொறுப்பு குணசேகரன் சார் என்னிடம் ஒப்படைத்தார் . முத்த பத்திரிகையாளர் ஜென்ராம் சாருடன் அதிகாலை நேரத்தில் விவாதித்த அற்புத தருணங்கள்.இந்த தொலைக்காட்சியின் முதல் விவாத நிகழச்சி என்னுடைய முதல் பார்வை நிகழ்ச்சிதான். நுட்பமாக செய்திகளை ஆராயும் அந்த நிகழ்ச்சி அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.    
 

கர்நாடகாவில் ஒரு மாத காலம் தேர்தல் பணி. முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டர் உட்பட வட கர்நாடக ஆளுமைகள் பலருடன் நேர்காணல் அனுபவங்கள். காலை 9 மணிக்கு பரப்பான "அரசியல் ஆரம்பம்" என்ற விவாத நிகழ்ச்சியும் மீண்டும் என் கைக்கு வந்தது

.22 நிமிடத்தில் இரண்டு எதிர் துருவங்களை வைத்து பொறி பறக்க நடந்திய விவாதங்கள் சுவாரசியமானவை. 2019 தேர்தலை முன்னிட்டு, யாரும் செய்யத் துணியாத வகையில், மாலை 6 மணிக்கு "தேர்தல் தர்பார் "என்ற விவாத நிகழ்ச்சியும் முழுமையாகஎன்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களிடம் ஈர்ப்பை பெற்றன.
நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் அடையாளமான இருக்கும் நிகழ்ச்சி" கதையல்ல வரலாறு". இந்த தொகுப்பில் 80 விழுக்காடு நிகழச்சி என்னுடையது என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். தமிழகத்தின் நிகழ்கால அரசியலை, வரலாற்றின் பார்வையிலிருந்து அணுகும்எனது திறனாய்வு எழுத்து வடிவத்திற்குப் பெரிதும் வரவேற்பு. அரசியல்வாதிகள், பொதுமக்கள்,திரைத்துறையினர் பலரும் பாராட்டிய "கதையல்ல வரலாறு "எனது அடையாளமாக மாறிப் போனது.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக ஜீவசகாப்தனின் அடையாளம் என்பது என்ன,? விவாத நிகழ்ச்சி, தேர்தல் திறனாய்வு, அரசியல் மற்றும் சினிமா தொடர்பான பகுப்பாய்வு. இதுதான் எனது அடையாளம். ஆனால், இனிமேல், இது போன்ற எந்த நிகழ்ச்சிகளும் எனக்கு கிடைக்காது. எந்த திறனாய்விற்கும், விவாத நிகழச்சிக்கோ எனக்கு வாய்ப்பிருக்காது. ஆனால், தினமும் இரண்டு செய்திகளை வாசித்துவிட்டு போகலாம். கண்ணியமான மாத வருமானம் கிடைக்கும். ஆனால், என்னுடைய தனித்துவம்,என்னவாகும்?

உயிருடன் இருப்பது வாழ்க்கை அல்ல...
உயிர்ப்புடன் இருப்பதே வாழ்வின் அடையாளம்...

.பொருளற்ற வாழ்வு கடினம்தான் அதற்காக பயனற்ற வாழ்வு வாழ முடியாது என்ற முடிவை துணிந்து எடுத்துவிட்டேன். உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தேவை....
நேர்மையான ஊடகப் பயணம்...
மக்களுக்கான ஊடக குரல்..
அதுவே எனது இலக்கு...

கருத்துகள் இல்லை: