புதன், 15 ஜூலை, 2020

உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் ஒரு நேபாளி: நேபாள் பிரதமர்....!

தமிழ் இந்து : உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமர்....!
உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள் ராமர் ஒரு
நேபாளி என்று நேபாள் பிரதமர் சர்மா ஒலி சர்ச்சையைக் கிளப்பும் விதமாகப் பேசியுள்ளார்.தெற்கு நேபாளில் தோரியில்தான் ராமர் பிறந்தார் என்கிறார் சர்மா ஒலி.
இதனையடுத்து ஒலிக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளர் பிஜய் சங்கர் சாஸ்திரி, இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் மக்களின் நம்பிக்கையோடு விளையாடினர், மக்கள் இவர்களை ஓரங்கட்டினர், இதே கதிதான் நேபாள கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்படும் என்று சாடினார்.
“கடவுள் ராமர் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே நேபாள் பிரதமர் மட்டுமல்ல, வேறு ஒருவரும் இந்த நம்பிக்கையோடு விளையாட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார் சங்கர் சாஸ்திரி.
நேபாளக் கவிஞர் பானுபக்தாவின் பிறந்த தின கொண்டாட்டத்தின் போது நேபாளப் பிரதமர் சர்மா ஒலி, “நேபாளம் பண்பாட்டு ஆக்ரமிப்பில் சிக்கியுள்ளது, இதன் வரலாறு திரிக்கப்படுகிறது” என்றார்.
கவி பானுபக்தா 1814-ல் பிறந்தவர். ராமாயணத்தை நேபாளி மொழியில் ஆக்கம் செய்தவர் பானுபக்தா. இவர் 1868-ல் இறந்தார்.

பிரதமர் ஒலி மேலும் கூறும்போது, “பிர்குஞ்ச் மேற்குப் பகுதியில் உள்ள தோரியில் உண்மையான அயோத்தி உள்ளது. அயோத்தி மேற்கு பிர்குஞ்ச் உள்ள ஒரு கிராமம் ஆகும். ராமர்-சீதா திருமணம் அந்தக் காலக்கட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் அங்கு நடந்திருக்க வாய்ப்பில்லை.
தோரி என்ற இடம்தான் உண்மையான அயோத்தி. இங்குதான் ராமர் பிறந்தார். இந்தியாவில் அயோத்தி பற்றி பெரிய சர்ச்சைகள் நிலவி வருகின்றன. ஆனால் எங்கள் அயோத்தியில் எந்த சர்ச்சைகளும் ஏற்படவில்லை. வால்மீகி ஆஸ்ரமம் நேபாளில் உள்ளது. குழந்தை பிறக்க தசரதர் மேற்கொண்ட சடங்குகள் நேபாளில் உள்ள ரிடி என்ற இடத்தில் நிகழ்ந்தவையே.
தசரதர் நேபாளத்தை ஆண்டார். அதனால் ராமரும் நேபாளத்தில்தான் பிறப்பதுதான் இயற்கை.
நேபாளத்தில் பல விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளும் அறிவுகளும் பிறந்தன, ஆனால் இந்த வளமையான மரபு பிற்பாடு தொடராமல் போனது.” என்று பேசியுள்ளார் பிரதமர் சர்மா ஒலி
நன்றி தமிழ் இந்து

கருத்துகள் இல்லை: