அதன்படி பரமசிவம், நெல்லை வந்த மனித உரிமை
ஆணைய புலானாய்வுப் பிரிவின் எஸ்.பி. சத்தியபிரியா, டி.எஸ்.பி. பிரபு,
இன்ஸ்பெக்டர் அகிலா ஆகியோர் முன்னிலையில் ஆஐரானார்.
அவரிடம் ராம்குமார் மரணத்தில் என்னென்ன
சந்தேகங்கள் உள்ளன என்று எஸ்.பி. சத்ய பிரியா விசாரித்தார். அது சமயம்,
அவர், சில ஆவணங்களைக் கொடுத்து விட்டு தனது தரப்பு வாக்கு மூலங்களை எஸ்.பி.
சத்யா பிரியா குழுவிடம் பதிவு செய்திருக்கிறார்.</">
விசாரணை முடிந்து வந்தவரிடம் நாம்
பேசியதில், எஸ்.பி.யம்மா என்கிட்ட விபரமெல்லாம் கேட்டாங்க. நான் பழைய
மாதிரியே சில ஆவணங்களைக் குடுத்துட்டு முன்னால சொன்ன எங்க சந்தேகங்களச்
சொன்னோம். சுவாதியக் கொன்னது யாரு. உண்மையான குற்றவாளி யாரு, அது
தெரியணும். அரசு பொறுப்புல இருந்தவர் , சிறை பாதுகாப்பல இருந்தவர்
எப்படிச் இறந்தார். ஜெயில்ல ஒயரைக் கடிச்சார்னு சொன்னாங்க. ஒருத்தரால
அப்படி மின்சார வயரைக் கடிக்க முடியுமா. நடக்குற காரியமா. முதல்ல அவனுக்கு
மோஷன் போவுது ஆஸ்பத்திரிக்கி கொண்டு போறோம். வாங்கன்னு தான் சொன்னாங்க.
அடுத்த பத்து நிமிஷத்தில் அவம் இறந்திட்டாம்னு சொல்லிட்டாங்க.
தற்கொலை இல்ல. கொலை தான். அதன் விசாரிக்கணும்னு இந்த ஆதாரத்த எல்லாம் குடுத்தோம். எஸ்.பியும், நாங்களும் ஜெயில்ல வார்டன், அவனோட இருந்த கைதிகள்னு எல்லார்ட்டயும் விசாரிச்சோம்னு சொன்னவுககிட்ட, நக்கீரன்ல அட்டைல போட்டு ராம்குமார் சாவு. தற்கொலையில்லன்னு, ஜெயில்ல உள்ளவுக கிட்டல்லாம் விசாரிச்சு வந்த நக்கீரன் செய்தி புக் ஜெராக்ஸ் காப்பிய அந்தம்மாட்டக் குடுத்து, இதப் பாருங்க, அதுல கூட தற்கொலையில்லன்னு போட்ருக்கின்னு, நான் ஆவணமா, நக்கீரன், ரெக்கார்டா பதிவு பண்ணிக் குடுத்தத வாங்கிப் பாத்த எஸ்.பி அதப் பதிவு பண்ணிக்கிட்டு, நானும் பாத்தேன்னு சொல்லி ரெக்கார்டா வைச்சுக் கிட்டாக.
நாங்க முடிஞ்ச வரைக்கும் நல்லது செய்றோம். நல்ல நடவடிக்கை எடுக்குறோம்னு சொன்னவுக, வெளியில போயி இதப் பெரிசு படுத்தாதீகன்னு சொன்னாக. என்னால முடிஞ்ச வரைக்கும் ஆதாரம், சந்தேகத்தக் குடுத்திருக்கேம். என்ன நடக்கும்னு பாப்போம்யா என்றார் தளர்வான குரலில்.

மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக் குழு,
நக்கீரன் கட்டுரையை ராம்குமாரின் மர்ம சாவு விஷயத்தில் முக்கிய ஆவணமாகப்
பதிவு செய்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக